நாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்!
தல 60 படத்தில் நடிப்பதற்காக நடிகர்களை தேர்ந்தெடுக்கும்படி தாங்கள் யாரையும் நியமிக்கவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தல 60 படம் குறித்து வெளியான வதந்திகளுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த தனது மனைவி நடிகை ஸ்ரீ தேவியின் ஆசைக்காக அவர் இந்த படத்தை தயாரித்தார். அஜித்தும் ஸ்ரீ தேவிக்காகவே இப்படத்தில் நடித்தார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மீண்டும் அதே கூட்டணி
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
நடிக்க வாய்ப்பு
இந்நிலையில் தல 60 படத்தில் நடிக்க விரும்புவோர் தங்களை தொடர்பு கொள்ளுங்கள் என சிலர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதை நம்பி ஏராளமானவர்கள் அவர்களை தொடர்பு கொள்கின்றனர்.

போனி கபூர் விளக்கம்
ஆனால் நடிகர்களை தேர்ந்தெடுக்கும்படி நாங்கள் யாரையும் நியமிக்கவில்லை என போனி கபூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போனி கபூரின் வழக்கறிஞர் ராதிகா ஐயர், வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தல 60 படத்தில் நடிக்க புதிய நடிகர்களை தேர்வு செய்யும் படி யாருக்கும் போனி கபூர் அதிகாரம் வழங்கவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்படி நடவடிக்கை
மேலும், ஏமாற்று பேர்வழிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும், மீறி ஏமாற்றப்பட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தங்கள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதிகா எச்சரித்துள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டி
போனி கபூரின் இந்த அறிவிப்பின் மூலம் தல 60 பற்றி சமூக வலைதளங்களில் நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தல 60 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையே அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











