Nerkonda parvai: சத்தமில்லாமல் வெளியான நேர்கொண்ட பார்வை போஸ்டர்... அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர் ஒன்றை முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர்.

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர் ஒன்றை முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர்.

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

அடுத்தமாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை அப்டேட்:

நேர்கொண்ட பார்வை அப்டேட்:

ரிலீஸ் தேதி நெருக்கத்தில் இருப்பதால், நேர்கொண்ட பார்வை படம் பற்றிய அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிரது. பொதுவாகவே அஜித் படம் என்றாலே அவர் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர். இதனால் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட்டுகளையும் அவர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

புதிய போஸ்டர்:

புதிய போஸ்டர்:

இந்நிலையில் இந்தப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என போனி கபூர் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். கூடவே அஜித்தின் போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கையில் சுத்தியலுடன் ஆக்ரோஷமாக அஜித் காட்சி அளிக்கிறார்.

எதிர்பார்ப்பு:

இந்த போஸ்டரைப் பார்த்து அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். போஸ்டர் வெறித்தனமாக, தரமான லுக்காக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மாலை நிச்சயம் இதை விட வேற லெவலில் அப்டேட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

பிங்க் ரீமேக்:

பிங்க் ரீமேக்:

பாலிவுட்டில் மாபெரும் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப் நடித்திருந்த வழக்கறிஞர் வேடத்தில் தமிழில் அஜித் நடித்துள்ளார். இந்தியில் இருந்து வேறுபட்டு தமிழில் அஜித்திற்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சில சண்டைக்காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X