"நோ மீன்ஸ் நோ".. காதல் மனைவியின் ஆசை நிறைவேறியது.. பெரும் களிப்பில் போனி கபூர்

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் ஆசை முழுமை அடைந்துள்ளதாக அவரது கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு போனி கபூர் அளித்த பரிசாக நேர்கொண்ட பார்வை அமைந்துள்ளது.

80 களில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஶ்ரீதேவி. ரஜினி, மற்றும் கமலோடு ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். 90 களில் பாலிவுட்டிற்கு சென்று இயக்குனர் போனி கபூரை மணந்து கொண்டார். இந்நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு துபாயில் நடந்த பார்ட்டியில் கலந்து கொள்ள சென்ற போது அகால மரணம் அடைந்தார்.

Bony Kapoor is elated over the victory of NKP.

அவரின் நீண்ட கால ஆசையான தேசிய விருது சென்ற வருடம் மாம் படத்திற்காக வழங்கப்பட்டது. அப்போது ஶ்ரீதேவியின் மகள் அவரது புடவையை கட்டிக் கொண்டு வந்து விருது பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஶ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்ற அவரது கணவரின் தயாரிப்பில் தமிழில் தல அஜித்தின் நடிப்பில் வெளியாகிய சமீபத்திய படமான நெர்கொண்டா பர்வைக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Bony Kapoor is elated over the victory of NKP.

#No means No# வசனம் ட்ரைண்டிங்கில் உள்ளது. இது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் "அன்புக்கும் ஆதரவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி என்று கூறுகிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு, கிருதி குல்ஹாரி மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோரைக் கொண்ட இந்தி திரைப்படமான பிங்கின் ரீமேக்காக சில மாற்றங்கள் செய்து எடுக்கப் பட்டது நேர் கொண்ட பார்வை.

Bony Kapoor is elated over the victory of NKP.

பிங்க் படத்தை அனிருத்த ராய் சவுத்ரி இயக்கியுள்ளார். அசல் படத்திலிருந்து அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோருடன் எச் வினோத் தமிழ் ரீமேக்கை இயக்கினார். இந்த படத்தில் தமிழில் வித்யா பாலன் அஜித் மனைவியாக நடித்துள்ளார். அது மட்டும் இன்றி நடிகர் சூர்யா இப்படத்தை காதல் மனைவி ஜோதிகாவுடன் படத்தை பார்த்து விட்டு அஜித்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பொக்கேவும் வாழ்த்து அட்டையும் அளித்துள்ளார்.

மொத்தத்தில் விழிப்புணர்வு மட்டும் அன்றி வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அது மட்டும் அன்றி தலையின் அடுத்த படத்தின் தயாரிப்பாளரும் போனி கபூரே! இன்று ஸ்ரீதேவியின் பிறந்த நாளாகும். ஸ்ரீதேவியின் பிறந்த நாளுக்கு நேர்கொண்ட பார்வையின் வெற்றியை பரிசாக அளித்துள்ளார் போனி கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X