Just In
- 45 min ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 51 min ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 1 hr ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 2 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
கலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹாலிவுட் படத்தில் நடிக்க போறேன்.. காரணம் .. இந்த ஒத்த செருப்பு.. பார்த்திபன் மகிழ்ச்சி !
கோவை : புத்தக வெளியிட்டு விழாவிற்கு வந்த பார்த்திபன் தனது அடுத்த படத்தை பற்றி சில முக்கிய தகவல்கள் பற்றி கூறினார். மேலும், ஒத்த செருப்பு படத்தினால் என்ன கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
கலையுலகில் பலரும் பல சாதனைகளை செய்வார்கள். ஆனால் பார்த்திபன் செய்த சாதனை பல ஆண்டுகளுக்கு தகர்க்கப்பட முடியாத சாதனை என்று கூறலாம். திரைக்கதைகளின் மன்னன் பாக்யராஜின் சிஷ்யனாக இருந்து அவரையே வியக்க வைக்கும்படி அவருடைய சிஷ்யன் என்று பெருமையடைய செய்துள்ளார் பார்த்திபன்.

இன்று கோவையில் உள்ள ஒரு தனியார் மாலில் தனது இரண்டு புத்தகங்களை வெளியிட வந்தார் பார்த்திபன். தான் எழுதிய கிறுக்கல்கள் மற்றும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற புத்தகத்தையும் கோவையில் முதல் முறையாக வெளியிட்டார் பார்த்திபன்.
நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பல சுவாரசியமான தகவல்களை ரசிகர்களிடையே தெரிவித்தார். ஒத்த செருப்பு படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது திரை வாழ்க்கையில் நடந்தததை பற்றி அங்கு இருந்தவர்களிடம் கூறினார். அதில் முக்கியமாக அவர் தெரிவித்தது ஒத்த செருப்பு படத்திற்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி உடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறேன் மேலும், ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகிறேன் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது என்றும் தெரிவித்தார். இது எல்லாம் நடப்பதற்கு காரணம் என்னுடைய ஒத்த செருப்பு திரைப்படம் தான் என்று பெருமையாக கூறினார்.

இவ்விழாவில் அவருக்கு ரசிகர்கள் இரண்டு பேர் தாங்கள் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார்கள் மற்றும் தனது அடுத்த படமான இரவின் நிழல் படத்தை பற்றி அவர் கூறியதாவது, இந்த படம் முழுக்க சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட உள்ளதாகவும் இது சுமார் ஒன்றரை மணி நேரம் படமாக இருக்கும் என்றும் இப்படத்தை பற்றிய மற்ற அப்டெட்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.