மிரட்டுது பூமிகா மோஷன் போஸ்டர்.. ஐஸ்வர்யா ராஜேஷுக்காக அண்ணன் சிவகார்த்திகேயன் ஆஜர்!
சென்னை: இயக்குநராக மட்டுமின்றி ஸ்டோன் பென்ச் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் கார்த்திக் சுப்புராஜ் நடத்தி வருகிறார்.
Recommended Video
கனா படத்தைத் தொடர்ந்து மீண்டும் லீடு ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ள பூமிகா படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தை ரதீந்திரன் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள பூமிகா படத்தின் மிரட்டல் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
காடுகளையும், பூமியை மையமாக கொண்டு இந்த படம் உருவாகவுள்ளது என்பது மோஷன் போஸ்டர் மற்றும் 'பூமி'கா என்ற டைட்டிலை பார்த்தாலும் தெளிவாக புரிகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இறுதியாக வெளியான வானம் கொட்டட்டும் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்ததாக விஜய்சேதுபதி உடன் அவர் இணைந்து நடித்திருக்கும் க/பெ. ரணசிங்கம் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











