»   »  பூமிகாவிடம் சில்மிஷம்: ரசிகரை புரட்டியெடுத்த காதலர் மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கச் சென்ற பிரபல நடிகை பூமிகாவின் கையைப்பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்ற ஒரு ரசிகரை, பூமிகாவின் காதலர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக கோலிவுட்டில் கால் பதித்தவர் பூமிகா. முதல் படம் நன்றாக ஓடியதால்அடுத்ததாக விஜய்யுடன் பத்ரி என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார்.இதற்குப் பிறகு என்ன காரணத்தாலோ பூமிகாவுக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு வரவில்லை. இதனால் தெலுங்குக்குப்போன அவர், அங்கிருந்து பூமிகா சாவ்லா என்று பெயரை மாற்றி பாலிவுட்டில் நுழைந்தார்.பாலிவுட்டில் சுமாராக நடித்துக் கொண்டிருந்த போது தான் பரத் தாகூர் என்ற யோகா மாஸ்டரின் காதல் வலையில் பூமிகாவிழுந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம் போல முதலில் பூமிகாவும் இதை மறுத்தார்.காதலை எத்தனை நாட்களுக்குத் தான் மறைத்து வைக்க முடியும்? கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் இருந்த நட்புவெளிச்சத்திற்கு வந்தது. வேறு வழியில்லாமல் பூமிகா தனது காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.இந் நிலையில் மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூமிகா உதவப்போக, அங்கு ஒரு ரசிகரால் ஏற்பட்டவிவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர். இதே போல தானும் உதவ முடிவு செய்தார் பூமிகா.இதன் படி நேற்று தனது காதலர் பரத் தாகூரையும் அழைத்துக் கொண்டு 500 பாக்கெட் பிரியாணி பொட்டலங்களுடன் மும்பைகலினா பகுதியிலுள்ள சாஸ்திரி நகர் குடிசைப் பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருந்தார்.பூமிகா தங்களது பகுதிக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே சாஸ்திரி நகர் பகுதியே அல்லோகலப்பட்டது. பூமிகாவைசுற்றி பெரும் கூட்டம் கூடி விட்டது. இதைப் பயன்படுத்தி ஒரு குறும்புக்கார ரசிகர் நைசாக பூமிகாவின் கையைப் பிடித்துஇழுத்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த பூமிகா அய்யோ என்று அலற, இதைப் பார்த்த அவரது காதலர் பரத் தாகூர் அந்த ரசிகரை பிடித்துதுவைத்து எடுத்து விட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து பூமிகா கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் குடிசைப் பகுதிக்கு சென்றேன். அவர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞர் என் கையைப் பிடித்து இழுத்துவிட்டார். இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.இது குறித்து பரத் தாகூர் கூறுகையில், பூமிகாவின் கையை அந்த நபர் பிடித்து இழுத்ததும் நானும் அதிர்ச்சியடைந்து விட்டேன்.பூமிகாவுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் அந்த வாலிபரை நான் தாக்கினேன் என்றார்.

பூமிகாவிடம் சில்மிஷம்: ரசிகரை புரட்டியெடுத்த காதலர் மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கச் சென்ற பிரபல நடிகை பூமிகாவின் கையைப்பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்ற ஒரு ரசிகரை, பூமிகாவின் காதலர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக கோலிவுட்டில் கால் பதித்தவர் பூமிகா. முதல் படம் நன்றாக ஓடியதால்அடுத்ததாக விஜய்யுடன் பத்ரி என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார்.இதற்குப் பிறகு என்ன காரணத்தாலோ பூமிகாவுக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு வரவில்லை. இதனால் தெலுங்குக்குப்போன அவர், அங்கிருந்து பூமிகா சாவ்லா என்று பெயரை மாற்றி பாலிவுட்டில் நுழைந்தார்.பாலிவுட்டில் சுமாராக நடித்துக் கொண்டிருந்த போது தான் பரத் தாகூர் என்ற யோகா மாஸ்டரின் காதல் வலையில் பூமிகாவிழுந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம் போல முதலில் பூமிகாவும் இதை மறுத்தார்.காதலை எத்தனை நாட்களுக்குத் தான் மறைத்து வைக்க முடியும்? கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் இருந்த நட்புவெளிச்சத்திற்கு வந்தது. வேறு வழியில்லாமல் பூமிகா தனது காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.இந் நிலையில் மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூமிகா உதவப்போக, அங்கு ஒரு ரசிகரால் ஏற்பட்டவிவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர். இதே போல தானும் உதவ முடிவு செய்தார் பூமிகா.இதன் படி நேற்று தனது காதலர் பரத் தாகூரையும் அழைத்துக் கொண்டு 500 பாக்கெட் பிரியாணி பொட்டலங்களுடன் மும்பைகலினா பகுதியிலுள்ள சாஸ்திரி நகர் குடிசைப் பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருந்தார்.பூமிகா தங்களது பகுதிக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே சாஸ்திரி நகர் பகுதியே அல்லோகலப்பட்டது. பூமிகாவைசுற்றி பெரும் கூட்டம் கூடி விட்டது. இதைப் பயன்படுத்தி ஒரு குறும்புக்கார ரசிகர் நைசாக பூமிகாவின் கையைப் பிடித்துஇழுத்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த பூமிகா அய்யோ என்று அலற, இதைப் பார்த்த அவரது காதலர் பரத் தாகூர் அந்த ரசிகரை பிடித்துதுவைத்து எடுத்து விட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து பூமிகா கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் குடிசைப் பகுதிக்கு சென்றேன். அவர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞர் என் கையைப் பிடித்து இழுத்துவிட்டார். இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.இது குறித்து பரத் தாகூர் கூறுகையில், பூமிகாவின் கையை அந்த நபர் பிடித்து இழுத்ததும் நானும் அதிர்ச்சியடைந்து விட்டேன்.பூமிகாவுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் அந்த வாலிபரை நான் தாக்கினேன் என்றார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கச் சென்ற பிரபல நடிகை பூமிகாவின் கையைப்பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்ற ஒரு ரசிகரை, பூமிகாவின் காதலர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக கோலிவுட்டில் கால் பதித்தவர் பூமிகா. முதல் படம் நன்றாக ஓடியதால்அடுத்ததாக விஜய்யுடன் பத்ரி என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார்.

இதற்குப் பிறகு என்ன காரணத்தாலோ பூமிகாவுக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு வரவில்லை. இதனால் தெலுங்குக்குப்போன அவர், அங்கிருந்து பூமிகா சாவ்லா என்று பெயரை மாற்றி பாலிவுட்டில் நுழைந்தார்.

பாலிவுட்டில் சுமாராக நடித்துக் கொண்டிருந்த போது தான் பரத் தாகூர் என்ற யோகா மாஸ்டரின் காதல் வலையில் பூமிகாவிழுந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம் போல முதலில் பூமிகாவும் இதை மறுத்தார்.

காதலை எத்தனை நாட்களுக்குத் தான் மறைத்து வைக்க முடியும்? கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் இருந்த நட்புவெளிச்சத்திற்கு வந்தது. வேறு வழியில்லாமல் பூமிகா தனது காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.


இந் நிலையில் மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூமிகா உதவப்போக, அங்கு ஒரு ரசிகரால் ஏற்பட்டவிவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர். இதே போல தானும் உதவ முடிவு செய்தார் பூமிகா.

இதன் படி நேற்று தனது காதலர் பரத் தாகூரையும் அழைத்துக் கொண்டு 500 பாக்கெட் பிரியாணி பொட்டலங்களுடன் மும்பைகலினா பகுதியிலுள்ள சாஸ்திரி நகர் குடிசைப் பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருந்தார்.

பூமிகா தங்களது பகுதிக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே சாஸ்திரி நகர் பகுதியே அல்லோகலப்பட்டது. பூமிகாவைசுற்றி பெரும் கூட்டம் கூடி விட்டது. இதைப் பயன்படுத்தி ஒரு குறும்புக்கார ரசிகர் நைசாக பூமிகாவின் கையைப் பிடித்துஇழுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பூமிகா அய்யோ என்று அலற, இதைப் பார்த்த அவரது காதலர் பரத் தாகூர் அந்த ரசிகரை பிடித்துதுவைத்து எடுத்து விட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த சம்பவம் குறித்து பூமிகா கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் குடிசைப் பகுதிக்கு சென்றேன்.

அவர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞர் என் கையைப் பிடித்து இழுத்துவிட்டார். இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இது குறித்து பரத் தாகூர் கூறுகையில், பூமிகாவின் கையை அந்த நபர் பிடித்து இழுத்ததும் நானும் அதிர்ச்சியடைந்து விட்டேன்.பூமிகாவுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் அந்த வாலிபரை நான் தாக்கினேன் என்றார்.


Read more about: bhoomika disturbed by a fan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil