twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்டர் படத்திற்கு தடை கேட்டு வழக்கு... படக்குழுவுக்கு கோர்ட் உத்தரவு

    |

    சென்னை : நடிகர் அருண் விஜய் நடிக்கும் பார்டர் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டைரக்டர் அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள படம் பார்டர். ஸ்பை த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஜய ராகவேந்தர் தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதமே இந்த படத்தின் ஃபஸ்ட்லுக்குடன் டைட்டில் வெளியிடப்பட்டது. முதலில் மே மாத இறுதியிலேயே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

     உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்க.. ஜிபி முத்துவால் கதறும் நடிகர் சதீஷ்! உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்க.. ஜிபி முத்துவால் கதறும் நடிகர் சதீஷ்!

    கொரோனாவால் தள்ளி போன ரிலீஸ்

    கொரோனாவால் தள்ளி போன ரிலீஸ்

    ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் ரிலீஸ் செய்யப்படவில்லை.

    5 மொழிகளில் தயார்

    5 மொழிகளில் தயார்

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய முக்கிய இந்திய மொழிகளிலும் டப் செய்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. இந்த படத்தில் ஹீரோயினாக ரெஜினாவும், வில்லனாக ஸ்டெஃபி பட்டேலும் நடித்துள்ளனர்.

    ரிலீஸ் செய்ய முடியவில்லை

    ரிலீஸ் செய்ய முடியவில்லை

    நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த படத்தின் இந்திய தியேட்டர் உரிமம், டிஜிட்டல் உரிமம், சேட்டிலைட் உரிமம் உள்ளிட்ட அனைத்து உரிமங்களையும் 11 11 ப்ரொவக்ஷன்ஸ் வாங்கி உள்ளது. ஆரம்பத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இந்த படம் தியேட்டர் திறப்பிற்கு பிறகு பல டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் ரிலீஸ் தேதியை இதுவரை அறிவிக்கவில்லை.

     குழப்பத்தில் படக்குழு

    குழப்பத்தில் படக்குழு

    இதற்கிடையில் படத்தை நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யலாமா என படக்குழு ஆலோசித்து வருகிறது. ஆனால் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாக கூறி விட்டதால் என்ன செய்வதென தெரியாமல் படக்குழு குழப்பத்தில் உள்ளது.

    தடை கேட்டு வழக்கு

    தடை கேட்டு வழக்கு

    இதற்கிடையில் டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் பார்டர் படத்தின் ரிலீசுக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்ட பிறகு ரிலீஸ் செய்ய முடியாமல் அடுத்தடுத்து கிளம்பும் பிரச்சனைகளால் படக்குழு கலக்கத்தில் உள்ளது.

    பதிவு செய்யப்பட்ட தலைப்பா

    பதிவு செய்யப்பட்ட தலைப்பா

    டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆண்டனி சாம் தாக்கல் செய்த மனுவில், ஒன்றரை கோடி செலவில் தான் பார்டர் படத்தை தயாரித்துள்ளதாகவும், இந்த தலைப்பை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதிர்ச்சி தந்த ஃபஸ்ட்லுக்

    அதிர்ச்சி தந்த ஃபஸ்ட்லுக்

    மேலும், தணிக்கை சான்று பெற்று, படத்தை வெளியிட உள்ள நிலையில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரத்தை ஆல் இன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    படத்தை தடை செய்யனும்

    படத்தை தடை செய்யனும்

    ஏற்கனவே பார்டர் என்ற தலைப்பை தான் பதிவு செய்துள்ள நிலையில், அதே தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டால் தனக்கு பெருத்த இழப்பு ஏற்படும் என்பதால், பார்டர் என்ற தலைப்பில் அருண் விஜய் நடித்துள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

    படக்குழு பதிலளிக்க உத்தரவு

    படக்குழு பதிலளிக்க உத்தரவு

    இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிராபகரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

    English summary
    Chennai 6th Auxiliary Court Judge Prabhakaran, who heard the case, directed All India Pictures producer Vijay Raghavendra, the audit committee and the Film Producers' Association to respond to the petition by September 20 and adjourned the hearing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X