சுதந்திர தினத்தை குறி வைக்கிறதா பார்டர் படக்குழு!?.. வெளியான புது அப்டேட்
சென்னை: அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தான் பார்டர். இந்த படம் அருண் விஜய்க்கு 31வது படமாகும்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி பட்டேல், ரெஜினா நடித்துள்ளனர். சாம் c.s. இசையமைத்துள்ளார்.
குற்றம் 23 படத்துக்கு பிறகு மீண்டும் அருண் விஜய் - அறிவழகன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அருண் விஜய்க்கு நிறைய படங்கள் வரிசையில் வெளிவர காத்துள்ளது. சினம், அக்னி சிறகுகள், சூர்யா தயாரிக்கும் படம், பாக்ஸர், ஹரி இயக்கும் படம் என படங்கள் வரிசையில் உள்ள நிலையில் அருண் விஜய்யின் ரசிகர்கள் வரவிருக்கும் படங்களை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இரண்டு படங்கள்
அருண் விஜய்யின் லைன் அப்பில் பார்டர் & அக்னி சிறகுகள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள்
மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. பார்டர் & அக்னி சிறகுகள் அடுத்தடுத்து வெளிவரும் என தெரிகிறது.

நம்பிக்கை அளிக்கிறார்
அருண் விஜய் - அறிவழகன் கூட்டணியில் இதற்குமுன் மெடிக்கல் த்ரில்லராக வெளியான குற்றம் 23 திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஈரம், வல்லினம், ஆறாது சினம் என வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் என்பதால் பார்டர் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.

ஆகஸ்ட் வெளியீடு
தற்போது கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஜூலை மாத முடிவில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில் பார்டர் படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் streaming rights ஐ Sony Liv தமிழ் வாங்கியுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











