புது போஸ்டர் உடன் பார்டர் படக்குழு ரம்ஜான் வாழ்த்து!
சென்னை: அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தான் பார்டர். இந்த படம் அருண் விஜய்க்கு 31வது படமாகும்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி பட்டேல், ரெஜினா நடித்துள்ளனர். சாம் c.s. இசையமைத்துள்ளார்.
குற்றம் 23 படத்துக்கு பிறகு மீண்டும் அருண் விஜய் - அறிவழகன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.

நம்பிக்கை அளிக்கிறார்
அருண் விஜய் - அறிவழகன் கூட்டணியில் இதற்குமுன் வெளிவந்த படம் குற்றம் 23. மெடிக்கல் த்ரில்லரான குற்றம் 23 திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இது மட்டுமின்றி ஈரம், வல்லினம், ஆறாது சினம், போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் என்பதால் இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்த படம் மட்டுமன்றி அருண் விஜய்க்கு நிறைய படங்கள் வரிசையில் வெளிவர காத்துள்ளது. சினம், அக்னி சிறகுகள், சூர்யா தயாரிக்கும் படம், பாக்ஸர், ஹரி இயக்கும் படம் என படங்கள் வரிசையில் உள்ள நிலையில் அருண் விஜயின் ரசிகர்கள் வரவிருக்கும் படங்களை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

நட்சத்திர ஹோட்டலில்
கடந்த மாதம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதனை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வித்தியாசமான முறையில் படக்குழு கோலாகலமாக வெளியிட்டது.

தாமதமாகும் ரிலீஸ்
முழுக்க முழுக்க ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பார்டர் படக்குழு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அருண் விஜய் & ஸ்டெபி பட்டேல் உள்ள புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











