வடக்கில் பிறந்தாரா முருகன்? நாக வம்சியின் ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை.. விளாசிவிட்ட பிரசாந்த்!
சென்னை: இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ள புராண கதை படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. சூலாயுதத்தில் இருந்து முருக வேல் தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்த படத்தில் முருகக் கடவுளாக என்டிஆர் நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது.
படத்திற்கு ரசிகர்கள் பலரும் ஃபயர் விட்டுக் கொண்டிருக்க, தயாரிப்பாளர் நாக வம்சி பதிவிட்ட ஒரு ட்வீட் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் வடக்கில் பிறந்து தெற்கில் உள்ளவர்கள் அதிகம் வழிபடும் கடவுளின் கதை எனக் குறிப்பிட்டது தான்.
முருகனாக ஜூனியர் என்டிஆர்: ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து ஆஸ்கர் வரை பிரபலமானவர் ஜூனியர் என்டிஆர். தேவரா படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும், அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் திரைப்படம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டோலிவுட்டின் பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் முருகனாக மாற ரெடியாகி விட்டார் ஜூனியர் என்டிஆர்.
வடக்கில் பிறந்ததாக நாக வம்சி ட்வீட்:
"Born in the North.
Forged in the Heartland.
Worshipped in the South.
Now... A tale destined to belong to the universe" என தயாரிப்பாளர் நாக வம்சி முருகக் கடவுள் குறித்து பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, முருகன் தமிழ்க் கடவுள் என பதிவிட்ட நிலையில், டோலிவுட் ரசிகர்களுடன் சோஷியல் மீடியா சண்டையே வெடித்துள்ளது.
வெடித்த சர்ச்சை: முருகன் வடக்கில் பிறந்தார் என்பது குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என்றும் தமிழ்க்கடவுள் முருகன் அவருக்கு சேயோன் என்கிற பெயர் உள்ளது. தமிழ்நாட்டில் தான் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. ஸ்கந்தன் என்று வட இந்தியாவில் முருகனை வழிபடுகின்றனர். அதற்காக முருகன் வடக்கில் பிறந்தவர் எனக் கூற முடியாது என பிரசாந்த் ரங்கசாமி வாதிட்டுள்ளார்.
டோலிவுட் ரசிகர்கள் எதிர்ப்பு: தமிழ்நாட்டில் தான் முருகர் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு என்றும் இமய மலையில் தான் சிவன், பார்வதி வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அப்போது, முருகனும் அங்கே தானே பிறந்திருக்க முடியும் என்று சர்ச்சையை கிளப்பி உள்ளனர். கடவுள்களுக்கு எல்லைகளை வரையறை செய்வதெல்லாம் சரியல்ல என்கிற வாதங்களும் வெடித்துள்ளன.


Click it and Unblock the Notifications