Vijay - ‘விஜயகாந்த்தோட விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க ஒரு மேடை ஏறினா தெரிஞ்சிடும்’.. போஸ் வெங்கட் விளாசல்

சென்னை: நடிகர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். விரைவில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. எப்படியாவது விஜய்யை வெல்ல வைக்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் சூளுரைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் நடிகர் போஸ் வெங்கட் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார்.

விஜய் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது ஒவ்வொரு படமும் அசால்ட்டாக 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைகிறது. இதற்கிடையே அவர் தனது மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். கடந்த டிசம்பர் மாதம்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நேராக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறும் காலம் தொலைவில் இல்லை என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

Bose Venkat Talks about Vijay And Tamizhaga Vetri Kazhagam

தமிழக வெற்றி கழகம்: இந்தச் சூழலில் அவர் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் ஜோராக தொடங்கிவிட்டன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை; 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்று முழங்கியிருக்கிறார். இதனால் விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது அவரது தொண்டர்களாக மாறியிருக்கிறார்கள்.

வெல்வாரா விஜய்?: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு எப்படியாக இருக்கும் என்று விவாதங்கள் எழ ஆரம்பித்துவிட்டன. மேலும் தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவாரா இல்லை கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வியை இப்போதே எழுப்பும் சிலர் விஜயகாந்த் கட்சி மாதிரி ஆரம்பத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து பிறகு சுவடில்லாமல் தமிழக வெற்றி கழகம் போய்விடுமோ என்றும் சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.

வெல்ல வைப்போம் என உறுதி: மேற்கூறியபடி ஒருபக்கம் பேச்சு ஓடிக்கொண்டிருந்தாலும் கண்டிப்பாக விஜய்யை கோட்டைக்கு அனுப்புவோம் என்று சூளுரைத்திருக்கின்றனர் அவரது தொண்டர்கள். முக்கியமாக விஜயகாந்த் எப்படி மவுசாக இருந்தாரோ அதே மவுசை விஜய்க்கு வரவைத்து அந்த மவுசு இறங்காமல் இருக்க அனைத்து வகையிலும் பணியாற்றுவோம். விஜயகாந்த் போல் கண்டிப்பாக தமிழ்நாடு அரசியலில் ஒரு தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

போஸ் வெங்கட் பேட்டி: இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறேன் என்றால் குறைந்தபட்சம் எனது வார்டுக்காவது செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றியிருக்க வேண்டும். ஒரு தலைமை பண்பு இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும். நான் எனது 19 வயதில் ஆட்டோ சங்க தலைவராக இருந்தேன். அந்த சங்கம் பற்றியும், அதன் நடைமுறைகள் பற்றியும் எனக்கு அத்தனையும் தெரியும்.

விஜயகாந்த் பிறவி தலைவர்: அதேபோல் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தவர். தான் சார்ந்த நடிகர் சங்கம் ஒருகட்டத்தில் கஷ்டப்பட்டபோது அச்சங்கத்தின் தலைவராக இருந்து பாடுபட்டு அந்த சங்கத்தை மீட்டுக்கொண்டுவந்தார். நடிகர் சங்கம் என்றால் என்ன? தமிழக மக்களுக்கு எப்படி ஒரு முதலமைச்சர் இருக்கிறாரோ அதுபோல் நடிகர்களுக்கு ஒரு முதலமைச்சராக இருந்தார். இதுதான் மக்கள் பணியில் ஈடுபடுவது.

விஜய் என்ன செய்திருக்கிறார்: விஜயகாந்த் மாதிரி விஜய் எந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார். நடிகர் சங்க பணியிலாவது ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா. விஜயகாந்த் பிறவியிலேயே அரசியல்வாதி. பிறவியிலேயே தலைமை பண்பு கொண்டவர்.விஜய் அப்படி இல்லை. ஒன்றே ஒன்று சொல்கிறேன் விஜய் ஒரு மேடை ஏறி பேசட்டும். அது வேறு யாராவது எழுதிக்கொடுத்து பேசினால்கூட அவருடைய நிலைப்பாடு என்ன என்று தெரிந்துவிடும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X