மக்களுக்கு ஏன் போட் விடல அஜித்.. போஸ் வெங்கட் கேட்ட கேள்வி.. தக்க பதிலடி கொடுத்த துணிவு வில்லன்!

சென்னை: இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் அமீர்கானுக்கு போட் விட்ட அஜித் தனது ரசிகர்களை காப்பாற்றவும் ஒரு போட் விட்டு இருக்கலாமே என கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

நடிகர் அஜித் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் பலருக்கும் இந்த மிக்ஜாம் புயல் நேரத்திலும் உதவி செய்துள்ளார் என்றும் விஷ்ணு விஷால் போட்டோ வெளியிட்டு நன்றி தெரிவித்த நிலையில் தான் இது வெளிச்சத்துக்கு வந்தது என பலரும் போஸ் வெங்கட்டை திட்டி வந்தனர்.

Bose Venkat trolled Ajith Kumar and Thunivu actor John Kokken slammed him

இந்நிலையில், துணிவு படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஜான் கொக்கன் போஸ் வெங்கட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

அஜித் உதவி: விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் சென்னை வெள்ளத்தில் வீட்டில் சிக்கித் தவித்து வந்த நிலையில், அவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். நடிகர் அஜித் குமார் இந்த விவரம் அறிந்து அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது. விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் தங்கள் வில்லா கம்யூனிட்டிக்கு செல்ல நடிகர் அஜித் குமார் பயண ஏற்பாடுகளை செய்து கொடுத்தார் என்றும் அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார் விஷ்ணு விஷால். மேலும், தங்களை மீட்ட சென்னை மாநகராட்சிக்கு டி.ஆர்.பி. ராஜாவுக்கும் நன்றி கூறியிருந்தார்.

போஸ் வெங்கட் கேள்வி: வில்லன் நடிகராக இருந்து வந்த போஸ் வெங்கட் இயக்குநராக மாறியுள்ள நிலையில், அமீர்கானுக்கு போட் விட்ட அஜித் குமார் டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகனுக்கும் ஒரு போட் விட்டு இருக்கலாம் என போட்ட போஸ்ட் சர்ச்சையை கிளப்பியது.

துணிவு வில்லன் பதிலடி: பாகுபலி, கேஜிஎஃப், சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஜான் கொக்கன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். போஸ் வெங்கட் போஸ்ட்டை பார்த்து கடுப்பான அவர், கழுதையும் வயதான ஒரு ஜோடியும் கதையின் புகைப்படத்தை பதிவிட்டு, நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிந்திருக்கும் போஸ் வெங்கட் சார் என பதிவிட்டு, இந்த உலகம் என்ன செய்தாலும் அதை தப்பாத்தான் பேசும் என வெளுத்து வாங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X