Boss Engira Baskaran: விரைவில் பாஸ் என்கிற பாஸ்கரன் 2... மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் காம்போ

சென்னை: ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

எம் ராஜேஷ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆர்யா, சந்தானம் கூட்டணியின் காமெடியில் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் இப்படத்தை பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 Boss Engira Baskaran 2: Boss Engira Baskaran second part is coming soon

விரைவில் பாஸ் என்கிற பாஸ்கரன் 2: சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எம் ராஜேஷ். முதல் படத்திலேயே ஜீவா, சந்தானம் கூட்டணியில் காமெடி ட்ரீட் கொடுத்த எம் ராஜேஷ், அடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன் இயக்கினார். ஆர்யா, சந்தானம், நயன்தாரா, ஷகிலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் ரசிகர்களுக்கு தரமான காமெடி ப்ளாஸ்ட்டாக அமைந்தது. ஆர்யாவும் சந்தானமும் 'நண்பேண்டா' என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு காமெடியில் மாஸ் காட்டியிருந்தனர். இன்னொருபக்கம் ஆர்யா - நயனின் கெமிஸ்ட்ரியும் இந்தப் படத்துக்கு செம்மையாக ஒர்க்அவுட் ஆனது.

அதேபோல், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்தன. அதன்பின்னர் எம் ராஜேஷ் இயக்கிய படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஜெயம் ரவியின் 30வது படத்தை இயக்கி வருகிறார் எம் ராஜேஷ். இந்தப் படத்தை முடித்துவிட்டு உடனடியாக பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகத்தை தொடங்க முடிவெடுத்துள்ளாராம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகத்திற்கான கதை, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் எம் ராஜேஷ், விரைவில் இதுகுறித்து அபிஸியல் அப்டேட்டை வெளியிட உள்ளாராம். இரண்டாம் பாகத்திலும் ஆர்யா, சந்தானம் கூட்டணி இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்தப் படத்திலும் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என எம் ராஜேஷ் பிளான் செய்துள்ளாராம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் எம் ராஜேஷின் ஃபேவைரைட் என்றால் அது காமெடி மட்டும் தான் என்பது ரசிகர்கள் அறிந்ததே. அதேநேரம் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சந்தானம், பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகம் மூலம் மீண்டும் காமெடியில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X