Vijay - என்னது பேட்டியா?.. ஆளை விடுங்க.. பதறி ஓடிய விஜய்

சென்னை: Vijay (விஜய்) பாஸ்கி ஒரு முறை பேட்டி கேட்டதற்கு நடிகர் விஜய் வேண்டவே வேண்டாம் என மறுத்திருக்கிறார்.

இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். அவரது படங்கள் அனைத்துமே அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யக்கூடியவை. இதன் காரணமாக அவரை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கும் தயாரிப்பாளர்கள் அனைவருமே தயாராக இருக்கிறார்கள். இதனால்தான் விஜய்யின் அடுத்த படத்துக்குக்கூட 175 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

Bosskey Talks about actor vijay during Youth Movie Time

லியோ: விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது படம்.

விஜய் 68: லியோ படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. விஜய்க்கு 68ஆவது படமாகவும், ஏஜிஎஸ்ஸுக்கு 25ஆவது படமாகவும் உருவாகிறது. யுவன் இசையமைக்கிறார். வெங்கட் பிரபு - விஜய் முதல்முறையாக இணைந்திருப்பதால் அனைவரது கவனமும் இப்போது விஜய் 68ல்தான் இருக்கிறது.

லியோ அப்டேட் எப்போது?; இதற்கிடையே விஜய்யின் பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. எனவே அன்றைய விஜய் 68 பூஜை போடப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் பூஜை நடக்காது மாறாக லியோ படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பாஸ்கி பகிர்ந்திருக்கிறார்.

Bosskey Talks about actor vijay during Youth Movie Time

பாஸ்கி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "யூத் படத்தில் நடித்தபோது என்னிடம் விஜய், உங்கள் நிகழ்ச்சிக்கு எனது அம்மா பெரிய ரசிகை என்றார். உடனே நான் நீங்களும் பேட்டிக்கு வரலாமே என்றேன். அதற்கு அவரோ, ஏங்க நான் நார்மலான பேட்டிக்கு வரவே தயங்குவேன். நீங்கள் காமெடி பேட்டிக்கு கூப்டுறீங்க என்று கூறிவிட்டார். அந்தப் படத்தில் நடித்தபோது விஜய் ஒரு சிறந்த மனிதர் என்பதை புரிந்துகொண்டேன். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் என்னை நன்றாகவும் கவனித்துக்கொண்டார்.

பாஸ்கி: ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஹரிகிரி அஸெம்ப்ளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவர். அதுமட்டுமின்றி சிறந்த கிரிக்கெட்டரும்கூட. மேலும் சன் டிவீல் சொல்லுங்க பாஸ் நிகழ்ச்சி மூலமும், கஷாயம் வித் பாஸ்கி என்ற சினிமா விமர்சன நிகழ்ச்சி மூலமும் தமிழ் ரசிகர்களிடம் அறியப்பட்ட அவர் யூத் மட்டுமின்றி எதிரி, சிவகாசி பொய் சொல்லப்போறோம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X