twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    200 கோடி வசூலை அசால்ட்டா தாண்டிய தெலுங்கு படங்கள்.. தர்பார் படத்துக்கு என்ன ஆச்சு?

    By Staff
    |

    சென்னை: பொங்கல் மற்றும் சங்கராந்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா படங்கள் ரீலிஸ் ஆகின.

    அதில் தமிழில் தர்பார் மற்றும் பட்டாஸ் ஆகிய படங்கள் ரீலிஸ் ஆனது. தெலுங்கில் சரிலேறு நிக்கேவரு மற்றும் அலா வைகுந்த புரமுலோ படங்கள் வெளியாகின.

    Both telugu movies get solid box office collections and fans asking Why Darbar is not ?

    தர்பார் எல்லா திரைப்படங்களுக்கும் முன்னதாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இதன் பின் சரிலேறு நிக்கேவரு படம் 11 ஆம் தேதி வெளியானது. இதற்கு அடுத்த நாள் அலா வைகுந்த புரமுலோ படம் வெளியானது. பொங்கல்அன்று தமிழில் பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

    இதில் தர்பார் திரைப்படம் வெளியாகி சில நாட்களிலேயே 150 கோடியை தொட்டது. அது பற்றி அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியானது. இதே போல தெலுங்கு படங்களான சரிலேறு நிக்கேவரு படமும் மற்றும் அலா வைகுந்த புரமுலோ திரைப்படமும் 100 கோடியை தொட்டதாக படத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

    தற்போது இவ்விரு தெலுங்கு படங்களும் 200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆந்திராவை அடுத்து தமிழகத்திலும் அதிகம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே ரஜினி ரசிகர்கள் லைகா நிறுவனம் தர்பார் படம் 200 கோடி வசூலித்ததாக இன்னும் ஏன் அறிவிக்கவில்லை என்றும், ரஜினி படம் இன்னமும் 200 கோடியை எட்டவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Read more about: darbar தர்பார்
    English summary
    For Pongal and sankaranthi holidays in tamil and telugu movies are released and now both the telugu movies are collected over 200 crores and above and fans are asking did Darbar crossed 200 or not and they waiting for official news by the production house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X