Pushpa 2: ராஷ்மிகாவுடன் செல்ஃபி.. ரசிகருக்கு விழுந்த பளார்.. என்னங்க இப்படி ஆகிப்போச்சு
சென்னை: ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே அடுத்து ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும் படம் என்றால் அது, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம்தான். கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபசில் என பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில், சென்னையில் நடைபெற்ற வைல்ட் ஃபயர் ஈவெண்ட்டில் ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ஃபி எடுக்க ரசிகர் ஒருவர் முயற்சி செய்ய, அவருக்கு அங்கிருந்த பாதுகாவலர்கள் பளார் விட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. படம் செம்மரக் கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக செம்மரக் கடத்தல் காரர்கள் எப்படியெல்லாம் மரங்களைக் கடத்துகின்றார்கள், அதற்கு ஒருசில அதிகாரிகள் எந்த அளவுக்கு துணை நிற்கின்றார்கள், பலர் எந்த அளவுக்கு செம்மரக் கடத்தல்களைத் தடுக்க தங்களது உயிரையும் தியாகம் செய்துள்ளார்கள் என்பது குறித்தும் பேசப்பட்டது.

முதல் பாகத்தின் இறுதியிலேயே இரண்டாம் பாகத்தின் லீட் கொடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வந்தது. இப்படியான நிலையில் படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படம் இப்போதே ரூபாய் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் குவித்துவிட்டது. தியேட்டர் வசூலில் படம் அசால்ட்டாக ரூபாய் 1000 கோடிகள் அடிக்கும் என்பதால் படக்குழு இப்போதே லாபங்களில் குளித்து வருகின்றது.

புஷ்பா 2: இப்படியான நிலையில் படத்தின் கிஷ்க் பாடல் சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் பாடலுக்கு ஸ்ரீலீலா நடனம் ஆடியுள்ளார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார். இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் கிஷ்க் பாடலுக்கு ஸ்ரீலீலா நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடலை சென்னையில் நடைபெற்ற ப்ரோமோசனில் ரிலீஸ் செய்தது படக்குழு. பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை ஈவென்ட்: இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, தேவி ஸ்ரீ பிரசாத், சுகுமாறன், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுனை ரசிகர்கள் தெலுங்கில் பேசச் சொல்ல, அவர் தமிழில்தான் பேசுவேன், அதுதான் இந்த மண்ணுக்கு செய்கின்ற மரியாதை எனக் கூறினார்.

ரசிகருக்கு பளார்: இந்நிகழ்ச்சி முடிவில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க தயாரிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் மேடையில் ஏறிய சில ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ஃபி எடுத்தனர். இதில் அவர்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு தொந்தரவு எதுவும் செய்யாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்தனர். அதேநேரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் ஜாலியாகவே செல்ஃபிக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தார். ஆனால் அதற்குள் அங்கு வந்த பவுன்சர்கள், ரசிகரைத் தள்ளி, கன்னத்தில் பளார் விட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் ரசிகர் பாவம், பவுன்சர் செய்தது தவறு என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











