பாகுபலி 2, மெர்சல்... 2017 முதல் இடம் யாருக்கு?

தமிழ் சினிமாவில் 2017ல் 201 படங்கள் ரீலீஸ் ஆகியுள்ளன. விஜய், அஜீத், சூர்யா, கார்த்திக், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

By Shankar

தமிழ் சினிமாவில் 2017ல் 201 படங்கள் ரீலீஸ் ஆகியுள்ளன. விஜய், அஜீத், சூர்யா, கார்த்திக், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவர்களில் தனித்தன்மையுடன் வெற்றியை எந்த நடிகரும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Box Office 2017: Baahubali 2 places top

எல்லோருக்கும், ரசிகர் கூட்டம் இருந்தாலும் அது ஓப்பனிங் காட்சியுடன் முடிவடைந்துவிடும்

கதை இருந்தால் கூட்டம் கொட்டகைக்கு தொடர்ந்து வரும் இல்லை என்றால் திங்கட்கிழமை தியேட்டர் டல்லடிக்கத் தொடங்கி விடும்.

Box Office 2017: Baahubali 2 places top

இதைத்தான் 2017ல் தமிழ் சினிமாவிற்கு வெற்றி தோல்வி படிப்பினையாக்கிவிட்டு விடை பெறவிருக்கிறது. என்னால்தான் படம் ஓடியது என்று எந்த நடிகரும் சொல்ல முடியாது.

தெலுங்கு மொழிமாற்றுப் படம், தமிழ் படம் என்று சென்சார் ஆன பாகுபலி 2 தந்த லாபத்தை எந்த தமிழ் படங்களின் வசூலாலும் முறியடிக்க முடியவில்லை என்பதுதான் 2017-ன் உண்மை.

2017ல் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடம் பிடித்த பாகுபலி, மெர்சல் இரு படங்களில் எது முதலிடம் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

Box Office 2017: Baahubali 2 places top

இரண்டு படங்களுமே தனித்து வந்த படங்கள். பாகுபலி தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 35 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்ட படம்.

பண்டிகை, தொடர் விடுமுறை இது எதுவும் இல்லாத சாதாரண நாளில் ரிலீசான படம். இரு மடங்கு கட்டண உயர்வு இல்லை, சாதாரண கட்டணத்தில் டிக்கட் விற்பனை செய்யப்பபட்டு சுமார் 150 கோடி வரை வசூல் செய்த இப்படத்தை சென்னை முதல் குக்கிராமம் வரை மக்கள் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டாடினர்.

வசூல் கணக்கு அடிப்படையில் தமிழகத்தில் பாகு பலி படத்தை 75 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.

மெர்சல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு விநியோக உரிமை 55 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்ட இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது.

முதல் மூன்று நாட்களில் வசூல் முடங்கி விடும் என எல்லோரும் கூறிக் கொண்டிருந்தனர்.

Box Office 2017: Baahubali 2 places top

நானும் ரெளடிதான் என்று வடிவேல் சினிமாவில் டயலாக் பேசுவது போன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் மெர்சல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன. தமிழக அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகளை மறந்து மெர்சல் படத்தின் அருமை பெருமைகளை சொல்லும் சம்பளம் வாங்காத பிஆர்ஓக்களாக கடும் பணியாற்றினர்.

இதன் விளைவு தியேட்டர்களில்வசூல் குவிந்தது. நஷ்டத்திலிருந்து மெர்சல் தப்பித்து லாபகரமான படமானது.

மெர்சல் படத்தின் டிக்கட் கட்டணம் அதிகம் என்பதால் குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை பாகுபலி அளவுக்கு இல்லை.

டிக்கட் கட்டணம், படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை, இயல்பாக ஓடிய படம் என்றஅடிப்படையில் பாகு பலி இந்த ஆண்டில் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

- நமது நிருபர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X