29 Box Office: ஞாயிறு வரை ஆட்சி செய்த விஜய்.. ரத்னகுமாரின் 29 படத்தின் 3 நாள் வசூல் தேறுச்சா?

சென்னை: ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்தது. வைபவ் ஹீரோவாக நடித்த அந்த படம் அவருக்கும் நல்ல வரவேற்பை கொடுத்தது. பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி முன்னணி நடிகையாகவும் மாறினார்.

அமலா பாலை வைத்து இயக்கிய ஆடை படம் கடைசி வரை ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்றது. ஆனால், அந்த படம் பல சர்ச்சைகளை சத்தித்த நிலையில், வசூல் ரீதியாக பெரிதாக வெற்றிப் பெறவில்லை.

Box Office 29 Movie Day 3 Collections also very dull due to Vijay CM Oath ceremony
Photo Credit:

சந்தானத்தை வைத்து இயக்கிய குலு குலு திரைப்படமும் படுத்து விட்டது. இந்நிலையில், விது, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 29 படமும் வசூலில் பெரிய பின்னடவை சந்தித்துள்ளது.

முதல்வரான விஜய்: கடந்த ஒரு வாரமாக விஜய் முதலமைச்சராக பதவியேற்பாரா? இல்லையா? என்கிற அரசியல் டிராமாவைத்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தியாவே தமிழ்நாட்டை பார்க்கும் அளவுக்கு அரசியல் களத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் அரங்கேறின. நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜய் பதவியேற்ற நிலையில், விடுமுறை நாட்களில் வெளியே கூட செல்லாமல் ஏகப்பட்ட மக்கள் டிவி முன்னாடி உட்கார்ந்து விஜய் முதலமைச்சர் ஆவதை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். தியேட்டர் பக்கம் ரசிகர்கள் பெரிதாக செல்லவில்லை.

29 படத்தின் 3 நாள் வசூல்: கார்த்திக் சுப்புரா, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கிய 29 படம் சரியாக இந்த சூழலில் வெளியாகி சிக்கிக் கொண்டது. முதல் நாளில் 30 லட்சம் வசூலை ஈட்டிய 29 திரைப்படம் சனிக்கிழமை சற்று உயர்ந்து 40 லட்சம் ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை அதைவிட கொஞ்சம் அதிகரித்து 44 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் 1.14 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது.

கருப்பு ரிலீஸ் ஆகுது: வித் லவ், யூத், தாய் கிழவி உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய வசூலை ஈட்டி வெற்றிப் பெற்றன. 4 கோடி பட்ஜெட்டில் உருவான 29 படம் இதுவரை 1.14 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது மிகவும் குறைவாக பார்க்கப்படுகிறது. மேலும், தயாரிப்பு நிறுவனத்துக்கு பலத்த நஷ்டத்தை இந்த படம் கொடுத்து விடும் என்கின்றனர். இந்த வாரம் சூர்யாவின் கருப்பு படமும் வெளியாகவுள்ள நிலையில், தனுஷின் கர மற்றும் 29 உள்ளிட்ட படங்கள் பல தியேட்டர்களில் இருந்து காணாமல் போய்விடும் என்கின்றனர். கருப்பு வெளியாவதற்கு முன்னதாக இந்த வாரம் 2 முதல் 3 கோடி அளவுக்காவது 29 படம் வசூல் செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X