Box Office: மங்காத்தா கொடுத்த மரண அடி.. திரெளபதி 2 vs ஹாட்ஸ்பாட் 2 வசூலில் மண்ணைக் கவ்வியது!
சென்னை: இந்த வாரம் விஜய் vs அஜித் படங்களின் ரீ ரிலீஸ் போட்டி இருந்தால் கூட தியேட்டர் ஓனர்கள் ஹேப்பியாகி இருப்பார்கள். சன் பிக்சர்ஸ் அஜித் குமாரின் மங்காத்தா படத்தை வேறலெவலில் புரொமோஷன் செய்து ரீ ரிலீஸ் செய்த நிலையில், அஜித் ரசிகர்கள் கேம்பா மாலையெல்லாம் போட்டு குட் பேட் அக்லி படத்துக்கு பண்ண FDFS கொண்டாட்டத்தை செய்துள்ளனர்.
இந்த வாரம் தமிழ் சினிமாவில் குடியரசு தின விடுமுறையை குறிவைத்து வெளியான ஹாட்ஸ்பாட் 2 மச் மற்றும் திரெளபதி 2 உள்ளிட்ட படங்களுக்கு சிம்ம சொப்பனமாக அஜித் குமாரின் மங்காத்தா 2 மாறிவிட்டது. தெறி தயாரிப்பாளரிடம் வைத்த கோரிக்கை மங்காத்தா தயாரிப்பாளரிடம் இந்த படங்கள் வைத்திருந்தால் கூட ஏதோ தப்பித்து இருக்கும் என்கின்றனர்.

கடந்த வாரம் பொங்கலை முன்னிட்டு வெளியான படங்களில் கார்த்தியின் வா வாத்தியார் படமும் வாஷ் அவுட் ஆகிவிட்டது. ஜீவாவின் தலைவர் தலைமையில் தம்பியில் வசூல் ரீதியாக தப்பித்து விட்டதாக சில தியேட்டர் ஓனர்களே கூறி வருகின்றனர்.
மச்சான் படம் காலி: ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் 10 கோடி பட்ஜெட்டில் உருவான திரெளபதி 2 திரைப்படம் முதல் நாளில் வெறும் 20 லட்சம் மட்டுமே வசூல் செய்தது என சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. புக் மை ஷோவில் கூட பெரிதாக டிக்கெட் புக்கிங் மற்றும் இன்ட்ரஸ்ட் என எதுவுமே சாதகமாக திரெளபதி 2 படத்துக்கு அமையவில்லை. மோகன் ஜி இயக்கிய திரெளபதி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், திரெளபதி 2வுக்கு ஏன் வசூல் வரவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் வசூல் பிக் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹாட்ஸ்பாட் 2 மச் அவுட்: விஷ்ணு விஷால் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்த ஹாட்ஸ்பாட் 2 மச் திரைப்படம் முதல் நாளில் வெறும் 8 முதல் 10 லட்சம் தான் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் பராசக்தி தான். ஆனால், அந்த படமும் பட்ஜெட் அதிகம் என்பதால், தமிழ் சினிமா ஜனவரியில் பெரிய வெற்றியை பெறவில்லை என்கின்றனர். தலைவர் தம்பி தலைமையில் படத்தை தொடர்ந்து அஜித் குமாரின் மங்காத்தா 2 தியேட்டர்களை காப்பாற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications











