பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடிக்கும் சிசிவி: வசூல் எவ்வளவு தெரியுமா? #CCV
Recommended Video

சென்னை: செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 21.7 கோடி வசூல் செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, பிரகாஷ் ராஜ், அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த செக்கச் சிவந்த வானம் கடந்த 27ம் ரிலீஸானது.
படத்தை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் அதை பாராட்டினார்கள். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

தமிழ் நாடு
செக்கச் சிவந்த வானம் ரிலீஸான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 21.7 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாள் ரூ. 8.05 கோடியும், இரண்டாவது நாள் ரூ. 6.15 கோடியும், மூன்றாவது நாள் ரூ. 7.50 கோடியும் வசூல் செய்துள்ளது. நேற்றும் செக்கச் சிவந்த வானம் படம் ஓடிய தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
செக்கச் சிவந்த வானம்
செக்கச் சிவந்த வானம் தமிழகத்தில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமை வரை ஆஸ்திரேலியாவில் ரூ. 88.07 லட்சமும், இங்கிலாந்தில் ரூ. 60.40 லட்சமும், நியூசிலாந்தில் ரூ. 26.12 லட்சமும் வசூல் செய்துள்ளது. மேலும் தனது வசூல் வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை
கடந்த 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் செக்கச் சிவந்த வானமும், 2வது இடத்தில் சாமி ஸ்கொயரும், 3வது இடத்தில் பரியேறும் பெருமாளும், 4வது இடத்தில் சீமராஜாவும், 5வது இடத்தில் இந்தி படமான சுய்தாகா மேட் இன் இந்தியாவும் இருந்தது.

வசூல்
செக்கச் சிவந்த வானம் படத்திற்கு அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் மூன்று நாட்களில் ரூ. 4.30 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











