Viduthalai : 10 நாட்களில் ‘விடுதலை’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?மாஸ் காட்டும் சூரி!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் வெளியாகி பத்து நாட்கள் ஆகி உள்ள நிலையில் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ஏராளமானோர் நடித்துள்ளனர்

தனுஷ் பாடிய உன்னோடு நடந்த பாடலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

Box office collection day 10 : Vijay sethupathi and soori starrer Viduthalai movie crosses rs 38 crore worldwide

விடுதலை : இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படம் முதல் பாகம் வெளியாகி உள்ளது. இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் போலீசாக நடித்துள்ளதால், தாறுமாறாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்குடன் இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பெயர் எடுத்த சூரி : இப்படம் சூரிக்கு ஒரு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுத்தந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூரிக்கு ரூ. 30 லட்சம் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதால், சூரியின் சம்பளத்தை 40 லட்சமாக படக்குழு உயர்த்தி உள்ளது. கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு காடு, மலை என ஓடிய சூரி பல காட்சிகளில் டூப்பே இல்லாமல் நடித்துள்ளார்.

விடுதலை இரண்டாம் பாகம் : மேலும், டீசரில் வந்த, மனுஷன் பொறக்கும் போதே ஒருத்தன் மேல ஒருத்தன் கீழ ஒருத்தன் சைடுல என பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா? இல்ல சமுதாயத்துல எல்லாருமே ஒண்ணுனு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா? என விஜய் சேதுபதி பேசி உள்ள வசனம் முதல் பாகத்தில் இடம் பெறாத நிலையில், இந்த வசனத்தை இரண்டாம் பாகத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Box office collection day 10 : Vijay sethupathi and soori starrer Viduthalai movie crosses rs 38 crore worldwide

மொத்த வசூல் : இந்நிலையில் கடந்த மாதம் மார்ச் 31ந் தேதி படம் வெளியான நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் விடுதலை திரைப்படம் உலகம் முழுவதும் 38 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தை பலரும் பாராட்டி வருவதால், இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X