twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்திரேலியாவில் 'வீரம்' டாப், மலேசியாவில் 'ஜில்லா' டாப்

    By Siva
    |

    சென்னை: அஜீத்தின் வீரம் படம் ஆஸ்திரேலியாவில் அதிக வசூலும், விஜய்யின் ஜில்லா மலேசியாவில் அதிக வசூலும் செய்துள்ளன.

    கடந்த 10ம் தேதி ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் இன்னும் மவுசு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழகம், அண்டை மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் 2 படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் வெளிநாடுகளில் வீரம் மற்றும் ஜில்லாவின் வசூல் விவரங்களை பார்ப்போம்.

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா

    2வது வார இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஜில்லா படம் ரூ.23.12 லட்சம் வசூலித்துள்ளது. ஆனால் வீரம் ஜில்லாவை விட அதிகமாக ரூ. 44.94 லட்சம் வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

    மலேசியா

    மலேசியா

    மலேசியாவில் படம் ரிலீஸான 10 நாட்களில் ஜில்லா ரூ.1.54 கோடி வசூலித்துள்ளது. வீரம் ஜில்லாவை விட சற்று குறைவாக ரூ.1.46 கோடி வசூல் செய்துள்ளது.

    பாக்ஸ் ஆபீஸ்

    பாக்ஸ் ஆபீஸ்

    மலேசிய பாக்ஸ் ஆபீஸில் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த வீரம் இரண்டாவது வாரத்தில்(16 முதல் 19ம் தேதி வரை) 4வது இடத்திற்கு வந்தது. கடந்த வாரம் 2வது இடத்தில் இருந்த ஜில்லா இரண்டாவது வாரத்தில் 5வது இடத்திற்கு சென்றுவிட்டது.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    வீரமும் சரி, ஜில்லாவும் சரி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    ஜில்லாவும், வீரமும் இப்படி வசூலை அள்ளுவதற்கு காரணம் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் தான். தங்களின் பிரிய நடிகர்களின் படத்தை தியேட்டரில் பார்த்து படத்தை ஹிட்டாக்கியுள்ளனர்.

    English summary
    Jilla and Veeram are doing an excellent business in domestic and overseas markets. While Veeram is the topper in box office collection in Australia, Jilla stands first in Malaysia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X