Box Office Comparison : கொத்தாக இறங்கிய படங்கள்.. பாக்ஸ் ஆபிஸில் நின்னு விளையாடியது யார் படம்?

சென்னை: நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி தென்னிந்தியாவில் பல படங்கள் வெளியானது. இதில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி. கலக்கப்போவது யாரு பாலாவின் காந்தி கண்ணாடி, வெற்றிமாறன் தயாரிப்பில் பேட் கேர்ள், தெலுங்கில் அனுஷ்காவின் காதி உள்ளிட்ட படங்கள் வெளியானது. இப்படியான நிலையில் இந்த படங்களின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்த இந்த படத்தின் புக்கிங் ஸ்லோவாக இருந்தது. ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷனுக்குப் பின்னர் படத்தின் புக்கிங் எகிறியது. படத்திற்கு முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 13 கோடிகள் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு வசூலைக் கணக்கில் கொண்டால் படம் எப்படியும் சுமார் 25 கோடிகள் முதல் 30 கோடிகள் வரை வசூலித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Box Office Comparison Between Tamil And Telugu Films SK Madharaasi KPY Bala Gandhi Kannadi Anushka Ghaati
Photo Credit:

அதேபோல் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி பெரும் போராட்டத்திற்கு பின்னர் வெளியான படம் பேட் கேர்ள். இந்த படத்தை வெற்றி மாறன் மற்றும் அனுராக் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார். பல சர்வதேச விருதுகளை வென்ற இப்படம் முதல் நாளில் ரூபாய் 25 லட்சத்தில் இருந்து ரூபாய் 50லட்சங்கள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Box Office Comparison Between Tamil And Telugu Films SK Madharaasi KPY Bala Gandhi Kannadi Anushka Ghaati
Photo Credit:

KPY பாலா: விஜய் டிவி கலக்கப்போவது யாரு பாலா, காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தின் புரோமோசன் பணிகளின் போதே படத்தின் மீது நல்ல அபிப்ராயம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. படம் முதல் நாளில் ரூபாய் 35 லட்சத்தில் இருந்து ரூபாய் 50 லட்சம் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Box Office Comparison Between Tamil And Telugu Films SK Madharaasi KPY Bala Gandhi Kannadi Anushka Ghaati
Photo Credit:

SK: அதேபோல் நேற்றைய தினம் வெளியான மிகவும் முக்கியமான படம் அனுஷ்காவின் காதி. இந்த படம் முழுக்க முழுக்க ஹீரோயின் செண்ட்ரிக் படமாக உருவாகியுள்ளது. படம் முதல் நாளில் தெலுங்கில் மட்டும் ரூபாய் 2 கோடிகள் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்றைய தினத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் என்பது படக்குழு எதிர்பார்த்ததை விடவும் சற்று குறைவாக இருக்கிறது என்ற பேச்சு திரை உலகில் உள்ளது. ஆனால் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் படத்தின் வசூல் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. முதல் நாளைப் பொறுத்தவரையில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் மட்டும் தான் அதிக வசூலைக் குவித்துள்ளது. அதுவும் மற்ற படங்களைக் காட்டிலும் அதிக வசூலைக் குவித்துள்ளது. முதல் நாள் ரேஸில் சிவகார்த்திகேயனின் மதராஸிதான் வெற்றி பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X