பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் முந்திய மிருதன், விஜய் 'சேதுபதி'யை வீழ்த்தியது

By Manjula

சென்னை: கடந்த வாரம் வெளியான ஜெயம் ரவியின் மிருதன் விஜய் சேதுபதியின் சேதுபதியை வசூலில் வீழ்த்தியிருக்கிறது.

ஜெயம் ரவியின் மிருதன், விஜய் சேதுபதியின் சேதுபதி மற்றும் மாகாபா ஆனந்தின் நவரச திலகம் ஆகிய 3 படங்கள் கடந்த வாரம் வெளியாகின.

இதில் மாகாபாவின் நவரச திலகம் எடுபடாத நிலையில் மிருதன் மற்றும் சேதுபதி படங்களுக்கிடையே உண்மையான போட்டி உருவாகியிருக்கிறது.

மிருதன்

மிருதன்

வழக்கம் போல மீண்டும் ஒரு வெற்றிப் படத்துடன் களமிறங்கியிருக்கிறார் ஜெயம் ரவி. தமிழின் முதல் ஸோம்பி படம் என்ற பெருமையுடன் வெளியாகியிருக்கும் மிருதன் கடந்த வாரம் சென்னையில் மட்டும் 1.17 கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது. மிருதன் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பலரும் ஜெயம் ரவிக்காக ஸோம்பிகளை திரையில் சென்று ரசித்து வருகின்றனர். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 வது வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஜெயம் ரவி.

சேதுபதி

சேதுபதி

முதன்முறையாக விஜய் சேதுபதி ஆக்ஷன் காட்டியிருக்கும் சேதுபதி குடும்பங்களை குறிவைத்து எடுக்கப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி என்கவுன்ட்டர் செய்தது சரியா? தவறா? என்று யாரும் யோசிக்காமல் அவருக்காவே படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் 74 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் 2 வது இடத்தைப் பெற்றிருக்கிறது சேதுபதி.

இறுதி சுற்று

இறுதி சுற்று

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் 4 வது வாரத்திலும் வசூலில் குறைவைக்கவில்லை. கடந்த வாரம் 8.19 லட்சங்களை வசூலித்த இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை 3.13 கோடிகளை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் நல்ல படங்களை ரசிகர்கள் கைவிடுவதில்லை என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது மாதவனின் இறுதி சுற்று.

ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

சித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் ஹீரோயினே இல்லாமல் கடந்த வாரம் வெளியான ஜில் ஜங் ஜக் 2 வது வாரத்தில் 9.61 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை 1.28 கோடிகளை வசூல் செய்திருக்கும் இப்படம் வரும் வாரங்களில் திரையரங்கை விட்டு எடுக்கப்படலாம் என்று திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரண்மனை 2

அரண்மனை 2

இதுவரை 2.94 கோடிகளை வசூல் செய்திருக்கும் அரண்மனை 2 கடந்த வாரத்தில் ஒரேயடியாக சரிந்து விட்டது. இதே போல மாகாபாவின் நவரச திலகம் மற்றும் சுசீந்திரனின் வில் அம்பு ஆகிய படங்களும் பாக்ஸ் ஆபீஸில் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X