குழந்தைகள் ஆர்வம்... குறைந்தபட்ச கேரண்டியுடன் ஓடும் இந்திரஜித்

By Shankar

சென்னை: தமிழ் படங்கள் ரீலீஸ் ஆகாத வெள்ளிக்கிழமை இவ்வருடம் குறைவாகவே இருக்கும். கடந்த 24.11..2017 அன்று வழக்கம் போல கெளதம் கார்த்திக் நடித்த இந்திரஜித், ராம்கி நடித்த இங்கிலீஸ் படம், ராய் லட்சுமி நடித்த ஜீலி - 2, புதுமுகங்கள் நடித்த வீரைய்யன், குரு உச்சத்தில இருக்காரு, லாலி, இடம் பொருள் ஆவி, ஈழ தமிழர்கள் பற்றிய " யாழ் " ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்திரஜித், ஜூலி - 2 என இரண்டு படங்கள் மட்டுமே தொடக்க நாளில் இருந்து குறைந்தபட்ச பார்வையாளர்களுடன் தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. மற்றபடங்கள் அனைத்தும் ரிட்டன் டிக்கட்டுடன் ஊருக்கு புறப்பட்டு போன பிரயாணி போல் ரீலீஸ் ஆன முதல் நாளே முடங்கி போனது.

Box office report of Indrajith, Julie 2

இந்திரஜித் படம் கெளதம் கார்த்திக் நாயகன், பிரம்மாண்டமான விளம்பரங்கள், கலைப்புலி இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் என்கிற கூடுதல் அம்சங்கள் இருந்ததால் குறைந்தபட்ச ஒபனிங் இருந்தது. ஜீலி - 2 ராய் லட்சுமி என்ற கிளாமர் நடிகை நடித்திருப்பது, முன்னால் நடிகை நக்மா கதை என்கிற மீடியா வெளிச்சம், கிளாமரான விளம்பரங்கள், பிரபுதேவா, சிரஞ்சிவி போன்ற உச்ச நட்சத்திரங்கள் படத்துக்கு ஆதரவாக பேசியது எல்லாம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷனுக்கு இவை எதுவும் உதவி செய்யவில்லை.

கடந்த மூன்று நாட்களில் ஓரளவு கூட்டத்துடன் ஓடும் படம் என்றால் அது இந்திரஜித் மட்டும் தான். காரணம், படம் குழந்தைகளைக் கவரும் பேன்டஸி ரகம். கலைப்புலி தாணுவும் தனக்கே உரிய மார்க்கெட்டிங் வித்தைகளைக் களமிறக்குவதால் முதலுக்கு மோசமிருக்காது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X