"ரிங்"கில் மட்டும் அல்ல பாக்ஸ் ஆபீஸிலும் சாம்பியன் ஆன மேரி கோம்: ரூ.50 கோடி வசூல்
மும்பை: பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான மேரி கோம் படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு அவர் பெயிரிலேயே இந்தியில் படமாக்கப்பட்டு ஆசிரியர் தினமான கடந்த 5ம் தேதி ரிலீஸானது. மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
மேரி கோம் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.

3 நாட்களில்
படம் ரிலீஸான அன்று ரூ.8 கோடியும், மூன்றே நாட்களில் ரூ.30 கோடியும் வசூல் செய்தது.

ரூ.50 கோடி
பாலிவுட்டில் கோடிக் கணக்கில் வசூல் செய்யும் கான்களின் படங்களுக்கு மத்தியில் மேரி கோம் ரிலீஸான பத்தே நாட்களில் ரூ.53.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஹீரோ
ஒரு படம் ரூ.50 கோடியோ, ரூ.100 கோடியோ வசூல் செய்ய ஹீரோ தேவையில்லை என்பதை மேரி கோம் நிரூபித்துள்ளது.

சாம்பியன்
மேரி கோம் குத்துச் சண்டையில் சாம்பியன். அவர் பெயரில் வெளியான படம் பாக்ஸ் ஆபீஸில் சாம்பியனாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











