ரிலீஸ் ஆன முதல்நாளில் ரூ.30கோடி வசூலித்த சிங்கம் ரிட்டன்ஸ்

By Mayura Akilan

சுதந்திர தினத்தன்று பாலிவுட்டில் ரிலீசான சிங்கம் ரிட்டன்ஸ் படம் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இதை அப்படியே பாலிவுட்டில் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் நடிக்க, ரோகித் ஷெட்டி இயக்கினார். இந்தியிலும் இப்படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-2வும் வெளியாகி வெற்றி பெற்றது. அதேபோல் இப்போது சிங்கம்-2வை, இந்தியில் சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர்.

அஜய் தேவ்கான்-கரீனா கபூர்

அஜய் தேவ்கான்-கரீனா கபூர்

ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், கரீனா கபூர் நடித்துள்ளனர். சிங்கம்-2 கதையை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்கள் செய்து இப்படத்தை பாலிவுட்டில் எடுத்துள்ளனராம்.

செம குத்துப் பாட்டு

செம குத்துப் பாட்டு

சிங்கம் ரிட்டன்ஸ்சில் 'அடா மஜி சதகளி...' என்ற ஒரு பாடல் குத்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அஜய் தேவ்கன் - கரீனா கபூர் ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர். இவர்களுடன் பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங்கும் ஆடி, பாடியுள்ளார். சுமார் 100 குழந்தைகளுக்கு போலீஸ் உடை அணிவிக்கப்பட்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்நாள் வசூல்

முதல்நாள் வசூல்

இந்தப்படம் சுதந்திரத்தன்று ரிலீஸ் ஆனது. முதல்நாளில் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சல்மான்கானுக்கு போட்டி

சல்மான்கானுக்கு போட்டி

சல்மான்கானின் கிக், அக்ஷய் குமாரின் என்டர்டெயின்மென்ட் படமும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகின்றன. இந்த நிலையில் சுதந்திரதினம், வார விடுமுறை, ஜென்மாஷ்டமி விடுமுறையை ஒட்டி வெளியாகியுள்ள சிங்கம் ரிட்டன்ஸ் வசூல் சாதனை படைக்கத் தயாராகிவிட்டது.

ரூ.100 கோடி கிளப்பில்

ரூ.100 கோடி கிளப்பில்

சிங்கம் ரிட்டன்ஸ் படமும் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X