பொங்கல் மற்றும் சங்கராந்தி ரேஸில் ஜெயித்தது யார்? ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்!

By staff

Recommended Video

Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh

சென்னை : பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்கள் படம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளியானது.

இதில் முதல் திரைப்படமாக 9 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் வெளியானது.

இப்படம் வெளியாகிய முதல் நாளே பல சாதனைகளை முறியடித்தது. தற்போது வரை தர்பார் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஒடி கொண்டு இருக்கிறது. இதற்கு பின்னர் பல படங்கள் வந்தாலும் தர்பார் சாதனையை முறியடிக்க முடியவில்லை. தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது.

Box office reports for Pongal and Sankaranthi released movies

தர்பார் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தர்பார் வெளியாகி அடுத்த நாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேறு நிக்கேவரு படம் வெளியானது. இப்படத்திற்கும் அங்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. மகேஷ் பாபு திரைப்படம் அங்கு வெளியானால் திருவிழா தான் என்பதை அவரது ரசிகர்கள் மீண்டும் நிரூபித்து உள்ளனர்.
இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 45 கோடிக்கு மேல் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Box office reports for Pongal and Sankaranthi released movies

சரிலேறு நிக்கேவரு படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து வெளியானது தான் அல்லு அர்ஜுன் நடித்து திரி விக்ரம் இயக்கிய அலா வைகுந்த புரமுலோ திரைப்படம். இப்படத்திற்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை இயக்குனர் திரி விக்ரம் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த ஒரு குடும்ப திரைப்படமாக எடுத்தார்.
இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 85 கோடி வசூல் செய்ததாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Box office reports for Pongal and Sankaranthi released movies

இதனை அடுத்து தமிழில் பொங்கல் அன்று தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியானது பட்டாசு திரைப்படம். தமிழர் நாகரிகம் மற்றும் தமிழர்களின் கலை பற்றி பேசியது இப்படம். தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்
இப்படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 6.5 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Box office reports for Pongal and Sankaranthi released movies

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X