புனித வெள்ளி போட்டியில் வென்றதா விஜய்யின் சச்சின் திரைப்படம்?.. எவ்வளவு வசூல் தெரியுமா?
சென்னை: முதல் வாரத்தில் இருந்த அளவுக்கு வசூல் குட் பேட் அக்லிக்கு இரண்டாவது வாரத்திலும் இருக்கும் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு நேற்றைய பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டுகள் சற்றே ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளன. விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் திரைப்படம் புனித வெள்ளியை குறி வைத்து நேற்று வெளியான நிலையில், கில்லி போலவே வசூலில் மிரட்டியது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரியா வாரியர், பிரபு, பிரசன்னா, சுனில் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் இதுவரை 200 கோடி வசூல் வேட்டையை நடத்தியுள்ளதாக ஒரு வழியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று வெளியிட்டது.

இந்த வாரமும் தொடர் விடுமுறை காரணமாக குட் பேட் அக்லி அதிக வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சச்சின் ரீ ரிலீஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது என்கின்றனர்.
விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்: ரசிகர்களும் பொதுமக்களும் தியேட்டர்களுக்கு சென்று அழுகாச்சி டிராமாவை பார்க்க அதிகம் விரும்புவதில்லை என்பதை கடந்த சில ஆண்டுகளாகவே தெளிவாக இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் புரியும் படி சொல்லி வருகின்றனர். பழைய சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆனால் கூட மக்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதை கடந்த ஆண்டு சினிமா துறையினர் உணர்ந்து கொண்டனர். கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டே 50 கோடி வரை வசூல் ஈட்டியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் வெளியாகாது என்பதால் விஜய் ரசிகர்களுக்கான ஒரே ட்ரீட் சச்சின் ரீ ரிலீஸ் தான்.

குட் பேட் அக்லி 9வது நாள் வசூல்: இந்தியளவில் குட் பேட் அக்லி திரைப்படம் புனித வெள்ளியான நேற்று அதிகபட்சமாக 6.75 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. வியாழனன்று 5.3 கோடி வசூல் செய்த நிலையில், 2வது வாரத்தில் வசூல் மீண்டும் உயர தொடங்கியிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு அதிகபட்சமாக 8 முதல் 10 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 126 கோடி வரை வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் அறிவித்துள்ளது. உலகளவில் 200 கோடி வசூலை கடந்து விட்டதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.
சச்சின் ரீ ரிலீஸ் வசூல்: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விஜய், ஜெனிலியா, ரகுவரன், சந்தானம், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து வெளியான நிலையில், முதல் நாளில் அதிகபட்சமாக ஒன்றரை கோடி ரூபாய்வரை வசூல் சாதனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சச்சின் ரீ ரிலீஸை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











