சரவெடி ஆயிரம் பத்தணுமா.. திங்கட்கிழமையும் ஆரஞ்சு அலர்ட்.. கருப்பு 150 கோடி வசூலை கடக்கப்போகுது!

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களில் ரஜினிகாந்த், விஜய் படங்களை தவிர்த்து ஒரு சில அஜித், சிவகார்த்திகேயன் படங்களை தொடர்ந்து திங்கட்கிழமையும் பாக்ஸ் ஆபீஸில் சுனாமி அலையை காட்டிக் கொண்டிருக்கிறது கருப்பு திரைப்படம்.

கருப்பு திரைப்படம் ஒரு பக்கா இன்ஃப்ளூயன்சர்கள் ஸ்கேம் என ஒரு பக்கம் சூர்யாவின் ஹேட்டர்கள் கதறிக் கொண்டிருந்தாலும், கருப்பு சாமிக்கு இவ்வளவு தான் எல்லை என படத்திலேயே ஆர்ஜே பாலாஜி கோடு போட்டாலும் நிஜமான அன்பான ஃபேன்ஸ் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் உலகம் முழுவதும் கருப்பு படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

Box Office Suriya surpasses the acid Monday Test with Karuppu with superb ticket bookings
Photo Credit:

கோலிவுட்டுக்கு இப்படியொரு படம் கிடைக்காதா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒரு நாள் தாமதம் ஆகி வந்தாலும் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமையான இன்று வரை கருப்பு டிக்கெட் புக்கிங் நான் ஸ்டாப் சாதனையை படைத்து வருகிறது.

கடன் எல்லாம் சரியாகிவிடும்: எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ என சூர்யா நடிப்பில் வெளியான முந்தைய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கவில்லை என்கிற விமர்சனங்களை எல்லாம் வெளியான 3 நாட்களில் கருப்பு படம் துவம்சம் செய்துள்ளது. 3 நாட்கள் தான் ஓடும். திங்கட்கிழமையிலிருந்து கருப்பு ஸ்கேம் அம்பலமாகி படம் எக்ஸ்போஸ் ஆகிவிடும் என்றனர். ஆனால், திங்கட்கிழமையும் தியேட்டர்களில் ஆரஞ்சு அலர்ட்டாக உள்ள நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் கடனெல்லாம் தீர்ந்துவிடும் என்கின்றனர்.

திங்கட்கிழமை ஆரஞ்சு அலர்ட்: கருப்பு படம் முதல் 3 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக பல இடங்களில் ஓடிய நிலையில், அதிரடியாக 120 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜன நாயகன் படம் வெளியாகி வசூல் சாதனையை ஜனவரி மாதமே படைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை. சூர்யாவின் கருப்பு படம் வெளியான நிலையில், திங்கட்கிழமையான இன்றும் டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ, டிஸ்ட்ரிக்ட் உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் பல தியேட்டர்களில் ஆரஞ்சு அலர்ட் காணப்படுகிறது. தியேட்டர்களில் கருப்பு சாமியின் ஆட்டத்தை பார்த்து சாமியாட்டம் போட ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படையெடுக்கின்றனர்.

150 கோடி வசூல் தாண்டும்: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டி முதலிடத்தை தற்போது கருப்பு படம் பிடித்துள்ளது. சூர்யா மீண்டும் தனது சிம்மாசனத்தை பிடித்துள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திங்கட்கிழமை வசூலையும் சேர்த்தால் படம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் இதே வேகத்தில் கருப்பு ஓடினால் 250 கோடி முதல் 300 கோடி வசூலை ஈட்டும் என்கின்றனர்.

த்ரிஷயம் 3 தடுக்குமா?: கருப்பு படத்தின் வசூல் ஓட்டத்தை மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 தடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வரும் மே 21ம் தேதி த்ரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸில் செம போட்டி நடக்கும் என்கின்றனர். சமீபத்தில் வெளியான மம்மூட்டி, மோகன்லால் படமான பேட்ரியாட் ஃப்ளாப் ஆன நிலையில், கருப்பு படத்தை த்ரிஷ்யம் 3 கட்டுப்படுத்துவது சிரமம் தான் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X