வசூலில் சரிந்தது விஜய்யின் 'தெறி'... முன்னணியில் சூர்யாவின் '24'

By Manjula

சென்னை: சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது சூர்யாவின் "24".

சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான "24" திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.முதல் வாரத்தில் இப்படம் 73 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் 'தெறி', 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்', 'மனிதன்' திரைப்படங்களை சென்னை பாக்ஸ் இப்படம் ஆபீஸில் ஓரங்கட்டியுள்ளது.

24

24

முதல் வார முடிவில் இப்படம் 1.53 கோடிகளை சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது. ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் நேர்மறையான விமர்சனங்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்துள்ளன. வேறு பெரிய படங்கள் வெளியாகாதது, கோடை விடுமுறை போன்ற காரணங்களால் வரும் நாட்களில் இப்படம் வசூலில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்

கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்

49.52 லட்சங்களுடன் 2 வது இடத்தை 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹாலிவுட் படங்களின் மீதான மோகம் , கோடை விடுமுறை போன்றவை இப்படத்திற்கு சாதகமான அம்சங்களாக மாறியுள்ளன.

மனிதன்

மனிதன்

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'மனிதன்' 10 நாட்கள் முடிவில் 1.96 கோடிகளை வசூல் செய்து 3 வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. திரைக்கதை, முன்னணி நடிகர்களின் நடிப்பு போன்ற காரணங்களால் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பின் உதயநிதிக்கு சொல்லிக் கொள்ளும் படமாக 'மனிதன்' அமைந்துள்ளது.

தெறி

தெறி

4 வார முடிவில் 4 வது இடத்திற்கு வந்துள்ளது விஜய்யின் 'தெறி'. கடந்த வாரத்தில் 21.62 லட்சங்களை மட்டுமே வசூல் செய்த 'தெறி' மொத்தமாக 9.69 கோடிகளை சென்னையில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தி ஜங்கிள் புக்

தி ஜங்கிள் புக்

9.89 லட்சங்களை வசூல் செய்து 'தி ஜங்கிள் புக்' 5 வது இடத்திலும், 43,000 ஆயிரத்தை வசூல் செய்து 'சசிகுமாரின்' வெற்றிவேல் 6 வது இடத்திலும் இருக்கிறது. 'பென்சில்', 'கோ 2' என 2 புதிய படங்கள் வரும் வாரத்தில் வெளியாகின்றன. புதிய படங்களின் வருகையால் மேலே பார்த்த படங்களின் வசூல் நிலவரம் மாறக் கூடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X