வசூலில்...தமிழ்ப்படங்களை பின்னுக்குத்தள்ளியது 'தி கஞ்சூரிங் 2'

By Manjula

சென்னை: கடந்த வாரம் வெளியான தி கஞ்சூரிங் 2 திரைப்படம் சென்னையில் மட்டும் 98.27 லட்சங்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஒரு நாள் கூத்து, பாண்டியோட கலாட்டா தாங்கல, வித்தையடி நானுனக்கு என 3 நேரடித் தமிழ்ப்படங்கள் வெளியாகின.

இதில் ஒரு நாள் கூத்துவுக்கு வரவேற்பு கொடுத்த ரசிகர்கள் மற்ற 2 படங்களையும் கண்டுகொள்ளவில்லை. அதேநேரம் ஹாலிவுட் படமான தி கஞ்சூரிங் 2 பாக்ஸ் ஆபீஸில் வசூல்மழை பொழிந்து வருகிறது.

தி கஞ்சூரிங் 2

தி கஞ்சூரிங் 2

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியான தி கஞ்சூரிங் 2 முதல் முதல் வார முடிவில் 98.27 லட்சங்களை சென்னையில் வசூல் செய்திருக்கிறது. வேறு பெரிய படங்கள் வெளியாகாதது, ஹாலிவுட் படங்கள் மீதான மக்களின் மோகம் ஆகியவற்றால் சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தை இப்படம் தக்க வைத்துள்ளது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

10 நாட்கள் முடிவில் 1.35 கோடிகளை வசூலித்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் 2 வது இடத்தில் உள்ளது. ரசிகர்களின் நேர்மறையான கருத்துக்கள், காமெடி போன்ற காரணங்கள் இப்படத்தை ஹிட்டடிக்க வைத்துள்ளன.

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

கடந்த வாரம் வெளியான ஒரு நாள் கூத்து 3 வது இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது. நேர்த்தியான திரைக்கதையும், ரசிகர்களின் நேர்மறை விமர்சனமும் இப்படத்திற்கு பெரும்பலத்தைக் கொடுத்துள்ளன. வரும் நாட்களில் இப்படம் இன்னும் அதிக வசூலை ஈட்டும் என்று திரையரங்க வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றன.

இறைவி

இறைவி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறைவி 20.36 லட்சங்களை வசூல் செய்து 4 வது இடத்தில் உள்ளது. 10 நாட்கள் முடிவில் இப்படம் 1.53 கோடிகளை வசூலித்துள்ளது. படத்தின் மீது இருந்த அதிக எதிர்பார்ப்பை படம் ஈடு செய்யத் தவறியதே பாக்ஸ் ஆபீஸில் இறைவியை பின்தங்கச் செய்து விட்டது.

பிறமொழிப் படங்கள்

பிறமொழிப் படங்கள்

சமந்தா-நிதின் நடிப்பில் வெளியான அ.ஆ 5.35 லட்சங்களையும், அக்ஷய் குமாரின் ஹவுஸ்புல் 3 6.59 லட்சங்களையும் வசூல் செய்துள்ளன. வரும் வாரங்களில் புதிய படங்கள் வெளியாகும்போது இந்த வசூல் நிலவரங்கள் மாறக்கூடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X