twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் 'ஆரம்பம்', 'தலைவா'வை விட 'வீரம்', 'ஜில்லா' வசூல் குறைவு

    By Siva
    |

    சென்னை: வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் அமெரிக்காவில் நல்ல வசூல் செய்த போதிலும் தலைவா மற்றும் ஆரம்பம் படங்களை விட குறைவாகவே வசூலித்துள்ளன.

    அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்நிலையில் வீரம் மற்றும் ஜில்லா அமெரிக்காவில் எப்படி கல்லா கட்டியிருக்கிறது என்று பார்ப்போம்.

    வீரம்

    வீரம்

    வீரம் படம் கடந்த 10ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை ரூ.1.48 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் அமெரிக்க வினியோகஸ்தரான அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட் தெரிவித்துள்ளது.

    ஜில்லா

    ஜில்லா

    அமெரிக்காவில் ஜில்லா ரிலீஸாகி கடந்த 21ம் தேதி வரை மொத்தம் 12 நாட்களில் ரூ.1.41 கோடி வருமானம் பார்த்துள்ளது என்று படத்தை அங்கு வெளியிட்ட அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட் தெரிவித்துள்ளது.

    ஆரம்பம்

    ஆரம்பம்

    தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான அஜீத்தின் ஆரம்பம் படத்தை விட வீரம் ரூ. 86 லட்சத்து 93 ஆயிரத்து 651 குறைவாக வசூலித்துள்ளது.

    தலைவா

    தலைவா

    கடந்த ஆண்டு ரிலீஸான தலைவா படத்தை விட விஜய்யின் ஜில்லா ரூ. 18 லட்சத்து 62 ஆயிரத்து 669 குறைவாக வசூல் செய்துள்ளது.

    ஒரு ஸ்டார்

    ஒரு ஸ்டார்

    அமெரிக்க சந்தையில் ஒரு நேரத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் மட்டுமே ஓடும். இந்நிலையில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானதால் வசூல் குறைந்துள்ளது என்று அட்மஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    தனியாக

    தனியாக

    வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் மட்டும் தனித்தனியாக ரிலீஸ் ஆகியிருந்தால் இரண்டுமே தலா ரூ.1.8 கோடி வருமானம் ஈட்டியிருக்கும் என்று அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட் தெரிவித்துள்ளது.

    English summary
    Though Veeram and Jilla are doing a good business in the US, their collections are lesser than Aarambam and Thalaivaa which got released last year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X