பாக்ஸ் ஆபிஸ்: விக்ரமிற்கு 'டப்' கொடுக்கும் விஜய் சேதுபதி

By Manjula

சென்னை: என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் கூட வசூலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது விக்ரமின் 10 என்றதுக்குள்ள.

கடந்த ஆயுத பூஜை தினத்தில் விக்ரமின் 10 என்றதுக்குள்ள மற்றும் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் வெளியாகின. வேறு படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இவ்விரு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Box Office: Vikram Beats Vijay Sethupathi

இதில் விக்ரம் - சமந்தா நடிப்பில் வெளியான 10 என்றதுக்குள்ள திரைப்படம் இதுவரை 1.65 கோடிகளை முதல் வாரத்தில் (சென்னையில் மட்டும்) வசூலித்திருக்கிறது.

விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் முதல் வாரத்தில் சுமார் 1.44 கோடிகளை சென்னையில் வசூலித்திருக்கிறது.

இதன் மூலம் 20 லட்சங்களில் நானும் ரவுடிதான் படத்தை வீழ்த்தி பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பெற்றிருக்கிறது விக்ரமின் 10 என்றதுக்குள்ள.

நயன்தாராவின் நடிப்பு மற்றும் ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் ஆகியவை நானும் ரவுடிதான் படத்திற்கு பெரிய பலமாக மாறியிருக்கிறது.

எனவே வரும் வாரங்களில் விக்ரமின் ஆதிக்கத்தை விஜய் சேதுபதி முறியடிப்பார் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

மேலும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த நட்சத்திரங்கள் பலரும் நானும் ரவுடிதான் படத்தை சமூக வலைதளங்களில் மனமாரப் புகழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் இயக்குநர் கவுதம் மேனன் நானும் ரவுடிதான் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் மனமாரப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X