கோடம்பாக்கம் பூரா குத்துமயமா இருக்கே!
கோடம்பாக்கத்தில் இப்போது குத்துச் சண்டை சீஸன் போலிருக்கிறது. குத்துச் சண்டையை மையமாக வைத்து பல படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
முன்பெல்லாம் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதே பாணியில் பல படங்கள் வரும்.
அட கிழக்கு வாசல் என்ற ஒரு ஹிட்டுக்குப் பிறகு, தலைப்பில் கிழக்கோடு வந்த படங்கள் ஏராளம்.

குத்துச் சண்டை
அதுபோலத்தான் இப்போது குத்துச் சண்டை. ஆனால் அந்த பாணியில் சமீபத்தில் வேறு படம் எதுவும் வராத நிலையிலும், ஏனோ குத்துச் சண்டை பின்னணியை இயக்குநர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யான்
ஜீவா, துளசி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் யான் குத்துச் சண்டைப் படம்தான். பயிற்சி பெற்று, ரொம்ப ரிஸ்க் எடுத்து சண்டையெல்லாம் போட்டிருக்கிறாராம் ஜீவா.

பூலோகம்
ஜெயம் ரவி - த்ரிஷா நடிப்பில் கடந்த இரு ஆண்டுகளாக உருவாகி வரும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரர். ஏற்கெனவே குமரன் சன் ஆப் மகாலட்சுமியி்ல் கிக் பாக்சிங் வீரராக நடித்தவர் ரவி.

மான் கராத்தே
மான் கராத்தே படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர்.
இம்மூன்று படங்களுமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மோதப் போவதுதான் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











