தல டக்கரு டோய்.. டிவிட்டரில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #BoxOfficeBaashaAJITH

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற போட்டி தல, தளபதி ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே விவாத பொருளாக அமைந்து வருகிறது.

Recommended Video

அஜித்தின் முதல் காதலி யார் தெரியுமா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

தியேட்டர்களில் போட்டுக் கொண்ட சண்டை தற்போது டிவிட்டரில் அதி தீவிரமாக லட்சக் கணக்கான டிவீட்களுடன் பெருகி வருகிறது.

இந்நிலையில், தற்போது #BoxOfficeBaashaAJITH என்ற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அடிச்சி தூக்கியாச்சு

அடிச்சி தூக்கியாச்சு

2019ம் ஆண்டு கிளாஸ் படமாக எனை நோக்கிப் பாயும் தோட்டாவும், பக்கா மாஸ் படமாக விஸ்வாசமும் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. கடந்த ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களும், அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்த நிலையில், அடுத்ததாக வலிமை படத்திற்காக தல ரசிகர்கள் வெயிட்டிங்.

கோலிவுட் எம்பரர்

கோலிவுட் எம்பரர்

தமிழ்நாடு மாநில அளவில் விஸ்வாசம் படம் 85.3 கோடி ஷேரையும், பாகுபலி இரண்டாம் பாகம் 82.1 கோடி ஷேரையும், ரஜினியின் 2.0 திரைப்படம் 68.5 கோடி ஷேரையும் பெற்றிருப்பதே இதுவரை அதிகம் என அஜித் ரசிகர்கள் டிவீட்களை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். இந்த திடீர் டிரெண்டிங்கிற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அடுத்த சூப்பர்ஸ்டார்

அடுத்த சூப்பர்ஸ்டார்

விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியான வீரம் படத்தை அவர்களின் டைட்டில் கார்டில் பயன்படுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ரஜினிக்கு பிறகு அஜித் இடம் பெற்றிருப்பதால அவர் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று தல ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பாக்ஸ் ஆஃபிஸ் பாட்ஷா

பாக்ஸ் ஆஃபிஸ் பாட்ஷா

அடிக்கடி ஒவ்வொரு ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் தான் டாப் என தல ரசிகர்களும், விஜய் தான் டாப் என தளபதி ரசிகர்களும் டிவிட்டரில் சண்டை போட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், இன்றைய ஹாட் ஹாஷ்டேகக பாக்ஸ் ஆஃபிஸ் பாட்ஷா என தல ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நோ புரொமோஷன்

நோ புரொமோஷன்

அதிக செலவு செய்து இசை வெளியீட்டு விழாவோ, படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளிலோ எதிலும் தல அஜித் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், அவருடைய திரைப்படங்கள் வெளிவரும் போது, தியேட்டர்கள் எல்லாம் திருவிழா கோலம் காணும், லாக்டவுனுக்கு பிறகு தியேட்டர்களுக்கு நிச்சயம் வலிமை படம் பூஸ்ட்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பெரிய தல

பெரிய தல

கோலிவுட் சினிமாவில் பெரிய தல கட்டு சார் அஜித்குமார் என விஸ்வாசம் படத்தின் காட்சிகளை வைத்து மீம் போட்டு அஜித் ரசிகர்கள் தங்கள் விஸ்வாசத்தையும், வலிமையையும் காட்டி வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கு வழக்கம் போல இந்த ஹாஷ்டேக்கிலும் டிவிட்டர் சண்டை நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X