இப்படி பண்ணலாமா சாந்தனு.. ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோவை பப்ளிக் பண்ண காதலர்.. செம வைரல்!
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் குறும்புத்தனமாக பாட்டு பாடும் வீடியோ ஒன்றை காதலர் சாந்தனு ஹசாரிகா பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது புதிய காதலரை அறிமுகப்படுத்தும் விதமாக இருவரும் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தன.

காதலருடன் டேட்டிங்
நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த ஜனவரி 28ம் தேதி தனது 35வது பிறந்தநாளை மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது புதிய காதலருடன் கொண்டாடினார். டூடுல் வரையும் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதிஹாசன் தற்போது டேட்டிங் செய்து வருகிறார்.

சாந்தனு ஹசாரிகா
டூடுல் ஓவியக் கலைஞரான சாந்தனு ஹசாரிகா தான் நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், "ஹேப்பி பர்த்டே லவ்" என்று பதிவிட, நடிகை ஸ்ருதிஹாசனும் அதற்கு காதலுடன் பதில் அளிக்க இருவரும் சென்னை, மும்பை என சுற்றி வருகின்றனர்.

ஒரே ரொமான்ஸ் தான்
மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா இணைந்து பணியாற்றும் சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்ருதிஹாசன் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். ஸ்டூடியோவிலேயே இருவரும் நல்லா ரொமான்ஸ் பண்றீங்க என நெட்டிசன்கள் சமீபத்தில் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை விசிட்
மேலும், மும்பையில் இருந்து காதலர் சாந்தனு ஹசாரிகாவை சென்னைக்கு அழைத்து வந்து தனது அப்பா கமல்ஹாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதி ஹாசன். இருவரும் சென்னையில் இணைந்து சுற்றும் போட்டோக்களும் சமூக வலைதளத்தில் தீயாய் பரவின.

கமலுக்கு பரிசு
கமலுக்கு ஐஸ் வைக்கும் விதமாக கமலை ராஜாவாக மாற்றி கையில் டார்ச் லைட்டுடன் இருக்கும் படியான டூடுல் ஒன்றையும் வரைந்து பரிசாக கொடுத்து அசத்தினார் சாந்தனு ஹசாரிகா. மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் தனது சமூக வலைதள பக்கங்களில் பெருமையுடன் அந்த ஓவியத்தை பகிர்ந்து கொண்டார்.
வீடியோ வெளியிட்ட காதலர்
இந்நிலையில், தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் காதலர் சாந்தனு உடன் தனிமையில் குறும்புத்தனமாக பாடிய வீடியோ ஒன்றை செல்போன் மூலம் படம்பிடித்த காதலர் அதை உடனடியாக தனது ரியாக்ஷனுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

லாபம் தள்ளிப் போகுமா
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைந்த நிலையில், லாபம் படத்தை ஏப்ரல் மாதத்திலேயே வெளியிடுவோம் என தயாரிப்பு தரப்பு கடந்த மாதம் அறிவித்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தலைவி உள்ளிட்ட படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படமும் தள்ளி போகுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இன்னமும் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











