பிறந்தநாள் வாழ்த்து சொன்ன காதலர்: ஐ லவ் யூ என்ற ஸ்ரீதேவியின் மகள்
Recommended Video

சர்ச்சை கிளப்பும் ஸ்ரீதேவியின் மகள்!- வீடியோ
மும்பை: ஜான்வி கபூருக்கு அவரது காதலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நேற்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நள்ளிரவில் கேக் வெட்டி அமர்க்களப்படுத்தினார்கள் குடும்பத்தார்.

ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர். ஜான்வி அக்ஷத் ராஜன் என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்ஷத் தான் ஜான்வியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதை பார்த்த ஜான்வி ஐஎல்ஒய்(I love you) என்று பதில் போட்டுள்ளார்.
ஜான்வி நடித்து வரும் தடக் படம் வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது தான் ஜான்வி நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications