இட ஒதுக்கீடு.. கங்கனாவுக்கு எதிராக டிரெண்டாகும் #Boycott_Kangana!
மும்பை: பிரபல நடிகை கங்கனா ரனவத்துக்கு எதிராக பாய்காட் கங்கனா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது இந்தியா முழுவதும் பரபரப்பானது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ரியா சக்கரவர்த்தி
இந்நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது சுஷாந்தின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். நடிகை ரியா, சுஷாந்த்தை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் அவர் வங்கி கணக்குகளை கையாண்டு வந்த ரியா பண மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிபிஐ அதிகாரிகள்
இந்நிலையில், இந்த சிபிஐ விசாரித்து வருகிறது. மும்பை வந்த சிபிஐ அதிகாரிகள் சுஷாந்தின் வீடு மற்றும் அந்த குடியிருப்பில் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சுஷாந்த் மறைவை அடுத்து இந்தி சினிமாவில் நெபோடிசம் பற்றி பரபரப்பு விவாதங்கள் தொடங்கியுள்ளன. பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை, நடிகை கங்கனா ரனவத் தொடர்ந்து சாடி வருகிறார்.

வாரிசு அரசியல்
தனது சமூக வலைதளப் பக்கங்களில் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்திப் பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர், மகேஷ்பட் உள்பட பலரை அவர் விளாசி வருகிறார். இந்நிலையில் சுஷாந்தின் குடும்ப வழங்கறிஞர் விகாஸ் சிங், கங்கனா ஒன்றும் சுஷாந்த் சிங்கின் பிரதிநிதி இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இடஒதுக்கீடு
இந்நிலையில் இடஒதுக்கீடு குறித்து நடிகை கங்கனா நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இது நவீன இந்தியர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது என்றும் நமது அரசியலமைப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டை பிடித்துக்கொண்டு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கங்கனாவுக்கு எதிராக ட்விட்டரில், #Boycott_Kangana என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இரண்டுக்கும் போராடுங்கள்
இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் நெபோடிசம் பற்றி பேசுவதும் சாதி விவகாரத்தில் அமைதி காப்பதும் உங்கள் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. நெபோடிசம், அவுட்சைடர்களை தடுப்பது போலவே, சாதியும் மற்ற சாதியினரை தடுக்கிறது. இரண்டுக்குமே போராடுங்கள் என்று ஒருவர் கூறியுள்ளார்.

அவுட் சைடர்கள்
கூடவே, பாலிவுட்டில் அவுட்சைடர் பற்றி பேசும் நடிகை கங்கனா, நடிகை டாப்ஸி, தீபிகா படுகோன், நடிகர் ஆயுஷ்மன் குரானா போன்ற அவுட் சைடர்களுக்காக ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். நடிகர் சோனு சூட்-டை மணிகர்னிகா ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே வெளியேற்றினார் என்றும் கூறியுள்ளனர்.

நிராகரித்து விட்டனர்
மக்கள் ஏற்கனவே கங்கனாவரை நிராகரித்துவிட்டனர் என்றும் அவர் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதே அதற்கு காரணம் என்றும் சிலர் கூறியுள்ளனர். சினிமாவில் இருக்கும் மாபியா பற்றி பேசிக்கொண்டு தான் மாபியா ஆவதற்கு முயற்சி செய்கிறார் என்றும் சில நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











