விஜய் தேவரகொண்டா படத்துக்கு சிக்கல்.. இதனால அந்த படத்தை புறக்கணிக்கிறோம்.. பாலிவுட் ரசிகர்கள் பளிச்!

மும்பை: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி உள்ள லைகர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வருகிறது.

அந்த படத்தை புறக்கணிக்க போகிறோம் என பாலிவுட்டின் பாய்காட் கேங் #BoycottLigerMovie ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக அமீர்கானின் லால் சிங் சத்தா படம் இந்த பாய்காட் பிரச்சனையால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா படத்துக்கு வேட்டு

விஜய் தேவரகொண்டா படத்துக்கு வேட்டு

பாலிவுட் நடிகர் படங்களை தொடர்ந்து எதிர்த்து வந்த பாய்காட் கும்பல் தற்போது டோலிவுட் நடிகரான விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளனர். அதற்கான விளக்கத்தையும் அவர்கள் தெளிவாக கூற ஏகப்பட்ட ரசிகர்கள் ஒன்று திரண்டு அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏகப்பட்ட சர்ச்சைகள்

ஏகப்பட்ட சர்ச்சைகள்

பிரஸ் மீட்டில் விஜய் தேவரகொண்டா டேபிள் மீது தனது காலை தூக்கி வைத்து ஆட்டிட்யூட் காட்டினார் என்றும், லைகர் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் என்றும், ஆஃபாட் பாடலில் ஆபாசமான வரிகள் இடம்பெற்றுள்ளது என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவை சுற்றி வலம் வருகின்றன.

பாய்காட் பற்றி

பாய்காட் பற்றி

சமீபத்தில் கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே, பாய்காட் கலாச்சாரத்தை பற்றி கிண்டல் செய்திருந்தனர். மேலும், அமீர்கான் என்கிற ஒற்றை மனிதருக்காக படத்தை புறக்கணித்தால், அந்த படத்திற்கு பின்னாடி இருக்கும் 2000 குடும்பங்கள் நஷ்டமடையும் என்றும் பேசியிருந்தார்.

பாய்காட் லைகர்

பாய்காட் லைகர்

இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படத்தையும் ஒன்றாக இணைந்து புறக்கணிக்க வேண்டும் என ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஹாஷ்டேக்கை பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும், அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் பாலிவுட்டில் அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், ஜான்வி கபூர் என நெப்போ கிட்ஸ்களை நடிகர்களாக்கி வருகிறார் என்றும், அவரது தயாரிப்பில் தெலுங்கு - இந்தி பைலிங்குவல் படமாக உருவாகி உள்ள லைகர் படத்தையும் புறக்கணித்து பாடம் புகட்ட வேண்டும் என நெட்டிசன்கள் கிளம்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X