விக்ரம் வேதாவுக்கும் பாய்காட் தான்.. ஹ்ரித்திக் ரோஷனுக்கு மிரட்டல்.. அப்படி என்ன பண்ணாரு தெரியுமா?

மும்பை: பாலிவுட் பாய்காட் போராட்டத்தால் இந்த வாரம் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தா மற்றும் அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருகின்றன.

Recommended Video

Laal Singh Chaddha Review | Yessa ? Bussa ? | Aamir Khan | Kareena Kapoor | NagaChaitanya

இந்நிலையில், ஹ்ரித்திக் ரோஷன் நேற்று போட்ட ஒரு ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த ட்வீட்டை டெலிட் பண்ணலைன்னா உங்களோட விக்ரம் வேதா படத்தையும் புறக்கணிப்போம் என ஒரே போடாக போட்டுள்ளனர்.

பாய்காட் பயம்

பாய்காட் பயம்

உங்களுக்கு பிடிக்கலைன்னா என் படத்தை பார்க்காதீங்க என பெரிய மார்க்கெட் உள்ள திமிரால் நடிகை கரீனா கபூர் முன்பு பேசிய பேச்சையும், என் படத்தை புறக்கணிக்காதீங்க, ப்ளீஸ் தியேட்டருக்குப் போய் பாருங்க என லால் சிங் சத்தாவிற்காக கெஞ்சுவதையும் எடுத்துப் போட்டு விளாசி வருகின்றனர் பாய்காட் ஆர்மியினர். ஒட்டுமொத்த பாலிவுட்டுகே தற்போது அவர்கள் பயத்தை காட்டி உள்ளனர்.

குறைந்து போன வசூல்

குறைந்து போன வசூல்

முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூல் செய்த அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் இரண்டாவது நாளில் 7 கோடி ரூபாயாக அதிரடியாக குறைந்தது. 3வது நாளான நேற்று படத்தின் வசூல் வெறும் 5 கோடி தான் என்கின்றனர். 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லால் சிங் சத்தா படத்திற்கு மரண அடியை பாய்காட் ஆர்மியினர் கொடுத்துள்ளனர். அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் படமும் வசூல் செய்யவில்லை.

ஹ்ரித்திக் ரோஷன் புரமோஷன்

ஹ்ரித்திக் ரோஷன் புரமோஷன்

லால் சிங் சத்தா படம் ஒரு அற்புதமான ஜெம் அதை தியேட்டரில் பார்க்க தவற வேண்டாம் என பாலிவுட் ரசிகர்களுக்கு ஹ்ரித்திக் ரோஷன் கோரிக்கை விடுத்து நேற்று போட்ட ட்வீட் அவருக்கே தற்போது பேக் ஃபயர் ஆகி விட்டது. அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள், அதை டெலிட் செய்ய வேண்டும் என ஆர்டர் போட்டு வருகின்றனர்.

விக்ரம் வேதாவுக்கு பாய்காட் தான்

விக்ரம் வேதாவுக்கு பாய்காட் தான்

அமீர்கான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், படம் பிளஸ், மைனஸ் எல்லாம் கடந்து பார்க்க வேண்டிய ஒன்று என ட்வீட் போட்டுள்ள ஹ்ரித்திக் ரோஷனை கடுமையாகவே பாலிவுட் ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். இப்படி தேவையில்லாமல் தங்கள் உணர்வுகளோடு விளையாடினால், அப்புறம் விக்ரம் வேதா படத்தையும் பாய்காட் பண்ண வேண்டிய நிலை வரும் ஜாக்கிரதை என எச்சரித்துள்ளனர்.

அக்‌ஷய் குமார் படத்துக்கு ஏன் சொல்லல

அக்‌ஷய் குமார் படத்துக்கு ஏன் சொல்லல

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை புரமோட் செய்துள்ள ஹ்ரித்திக் ரோஷனிடம், அதே நாளில் வெளியான அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் படத்தை ஏன் பாராட்டவில்லை என்றும் அந்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என ஏன் சொல்லவில்லை என அக்‌ஷய் குமார் ரசிகர்களும் ஹ்ரித்திக் ரோஷனை போட்டு வெளுத்து வருகின்றனர்.

 தமிழ் படமே தரமா இருக்கும்

தமிழ் படமே தரமா இருக்கும்

ஹ்ரித்திக் ரோஷன் லால் சிங் சத்தா படத்தை பார்க்க சொன்ன நிலையில், விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தை பார்த்து காசு வேஸ்ட் பண்ணாதீங்க, ஓடிடியில் விக்ரம் வேதா இந்தி டப்பிங்கே இருக்கிறது. அந்த படத்தின் தமிழ் வெர்ஷனே தரமா இருக்கும். மாதவன், விஜய்சேதுபதி தான் நடிச்சிருக்காங்க, அதையே பாருங்க ஹ்ரித்திக் ரோஷன் படத்தை பார்க்காதீங்க என #BoycottVikramVedha ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X