திருப்பதிக்கு போன ஷாருக்கான்.. #BoycottJawanMovie டிரெண்டை ஆரம்பித்த நெட்டிசன்கள்.. என்ன பஞ்சாயத்து?

ஹைதராபாத்: நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் உள்ளிட்டோர் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், ஜவான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு திடீரென இந்து மக்களை முட்டாளாக்கும் நோக்கில் நடிகர் ஷாருக்கான் திருப்பதிக்கு சென்றுள்ளார் என்றும் ஜவான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் பாலிவுட்டின் பாய்காட் கேங் #BoycottJawanMovie ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

BoycottJawanMovie hashtag trending after Shah Rukh Khan visits Tirupati

பதான் படத்தில் தீபிகா படுகோன் காவி நிற உள்ளாடையை அணிந்திருந்தார் என சர்ச்சையை கிளப்ப அந்த படம் அதிரிபுதிரியாக 1000 கோடி வசூலை ஈட்டியது. அதே போல இப்பவும் நல்லா படத்திற்கு நெகட்டிவ் புரமோஷனை செய்யுங்க என ஷாருக்கான் ரசிகர்கள் இந்த பாய்காட் டிரெண்டிங்கை ஆதரித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.

ஜவான் படத்துக்கு எதிர்ப்பு: இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான், நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சுமார் 30 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாள் வசூல் மட்டும் இந்த படம் உலக அளவில் 100 கோடி ரூபாயை எட்டும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக இந்து மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஷாருக்கானுக்கு எதிராக பாய்காட் கேங் கிளம்பியுள்ளது.

திருப்பதியில் ஷாருக்கான் சாமி தரிசனம்: ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த வேண்டும் என்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவிய நிலையில் தற்போது இந்து மக்களை ஏமாற்றி ஜவான் படத்தை ஓடவைக்க பார்க்கிறார் ஷாருக்கான் என ஷாருக்கானின் ஹேட்டர்கள் ட்விட்டரில் #BoycottJawanMovie டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எங்கள் கோயில் ஒன்றும் ஜிம்மிக்ஸ் ஸ்டுடியோ இல்லை: நடிகர் ஷாருக்கான் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த வீடியோவை ஷேர் செய்து நெட்டிசன்கள் எங்கள் கோயில் ஒன்றும் நீங்கள் புரோமோஷன் செய்ய ஜிக்கிக்ஸ் ஸ்டுடியோ இல்லை என பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

1000 கோடி கன்ஃபார்ம்: பதான் படத்திற்கு இதைப்போல பாய் காட் கேங் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்தத் திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்நிலையில் ஜவான் படத்துக்கும் ஃப்ரீ புரமோஷனை ஆரம்பித்ததற்கு நன்றி என ஷாருக்கான் ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X