நயன்தாராவுக்கு வந்த அதே பிரச்சனை.. இப்போ கரீனா கபூருக்கும் வந்திருக்கு #BoycottKareenaKhan

மும்பை: கணவர் சைஃப் அலி கானை தொடர்ந்து நடிகை கரீனா கபூர் கானும் இந்துக்களின் மனங்களை புண்படுத்த பார்க்கிறார் என #BoycottKareenaKhan ஹாஷ்டேக்கை பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சீதையாக கரீனா கபூர் கான் நடிக்கக் கூடாது என பாலிவுட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகை நயன்தாரா சீதையாக நடிக்கக் கூடாது என எதிர்ப்பு குரல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கரீனா கபூர்

கரீனா கபூர்

40 வயதாகும் கரீனா கபூர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். 3 இடியட்ஸ், ஜப் வி மெட், ரா ஒன் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் கரீனா கபூர். ஆமீர் கானின் அப்கமிங் படமான லால் சிங் சத்தா படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

12 கோடி சம்பளம்

12 கோடி சம்பளம்

இந்நிலையில், அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சீதையின் படத்தில் சீதையாக நடிக்க கரீனா கபூரை படக்குழுவினர் அணுகி உள்ளனர். அந்த படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் தான் சம்மதிப்பேன் என சமீபத்தில் கரீனா கபூர் வைத்த பெரிய டீல் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. ஹீரோக்களுக்கு 100 கோடி சம்பளம் பாலிவுட்டில் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீதையாக நடிக்கக்கூடாது

சீதையாக நடிக்கக்கூடாது

இந்நிலையில், பாலிவுட் ரசிகர்கள் பலரும் சீதா தேவியாக நடிகை கரீனா கபூர் கான் நடிக்கக் கூடாது என தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். #BoycottKareenaKhan என்கிற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டு இஸ்லாமியராக மாறி விட்ட நடிகை கரீனா கபூர் கான் சீதையாக நடிக்க தகுதியற்றவர் என பாலிவுட் ரசிகர் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏகப்பட்ட ட்ரோல்களையும் கரீனாவுக்கு எதிராக பரப்பி வருகின்றனர்.

சூர்ப்பனகை

சூர்ப்பனகை

மேலும், சூர்ப்பனையாக வேண்டுமானால் நீங்க நடிங்க, இந்துக்களின் கடவுளான சீதையாக நீங்க நடிக்கவே கூடாது என கடுமையான கண்டனங்களையும் மீம்களையும் போட்டு இணையத்தை கலவர பூமியாக மாற்றி வருகின்றனர்.

கங்கனா தான் சீதா

கங்கனா தான் சீதா

சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட்டின் பிரபலங்கள் பலரும் இந்த ட்விட்டர் சண்டையில் இணைந்துள்ளனர். கரீனா கபூர் கானுக்கு பதிலாக நடிகை கங்கனா ரனாவத் தான் சீதையாக நடிக்க சரியானவர் என பாடகி சாரு மைனியும் ட்வீட் போட்டு கரீனாவுக்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

நயனுக்கும் இதே பிரச்சனை

நயனுக்கும் இதே பிரச்சனை

கடந்த 2011ம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடிகை நயன்தாரா நடித்ததற்கும் கிறிஸ்துவரான டயானா மரியம் குரியன் எப்படி சீதையாக நடிக்கலாம் என்கிற எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அதையெல்லாம் மீறி நயன்தாரா சீதையாகவும் மூக்குத்தி அம்மனாகவும் நடித்து மதங்களுக்கு அப்பாற்பட்டு தான் ஒரு நடிகை என நிரூபித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X