அப்பா இறந்தார்.. முழு குடி.. மலேசிய பெண்ணிடம் ஏமாற்றம்.. பாய்ஸ் மணிகண்டன் வாழ்வில் இவ்வளவு சோகமா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். சிறப்பாகவே படத்தில் நடிக்கவும் செய்திருந்தார். இந்தச் சூழலில் அந்தப் படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த அவர் திடீரென காணாமல் போனார். இப்போது விஜய் சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற படம் வெளியானது. யூத்ஃபுல் சப்ஜெக்ட்டோடும், தனது வழக்கமான பிரமாண்டத்தோடும் படத்தை உருவாக்கியிருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் ஷங்கர் இளைய கலாசாரத்தை கெடுக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டன. ஆனால் இந்தப் படம் இன்றுவரை பலரிடம் கனெக்ட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Maharaja

மணிகண்டன்: இதில் நடித்துதான் ஜெனிலியா, பரத், சித்தார்த், நகுல், தமன் உள்ளிட்டோரெல்லாம் பயங்கர ஃபேமஸ் ஆனார்கள். அவர்களில் மணிகண்டனும் ஒருவர். படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர்; படத்தின் திருப்புமுனைக்கும் முக்கிய காரணங்களில் ஒருவராக இருப்பார். அந்தப் படத்தின் மூலம் நல்ல பெயரையும் பெற்றார். அதன் பிறகு கிச்சா வயசு 16, யுகா உள்ளிட்ட படங்களில் நடித்தார். கிச்சா வயசு 16 படத்தில் சிம்ரனும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீ எண்ட்ரி: சில காலங்களிலேயே தமிழ் சினிமாவிலிருந்து மணிகண்டன் ஓரங்கட்டப்பட்டார். ஏன் அவருக்கு இந்த சறுக்கல் என்று யாருக்கும் புரியவில்லை. இப்போது அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் மகாராஜா படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு படம் வெளியாகி மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார் மணிகண்டன். அவரது நடிப்புக்கும் உச்சக்கட்டமாக வரவேற்பு கிடைத்துவருகிறது. இதனால் மணிகண்டன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சில காலத்துக்கு முன்பு மணிகண்டன் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பாய்ஸ் படத்துக்கு பிறகு காதல் FM, கிச்சா வயசு 16, யுகா படங்களில் நடித்தேன். யுகாவில் நடிக்கும்போதுதான் எனது அப்பா இறந்துவிட்டார். அப்பாவால் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது நான் சம்பாதித்துதான் ஓரளவு கடன் அடைத்தேன். அந்த காலக்கட்டம் ரொம்ப கஷ்டமாகவேத்தான் போனது.

பழிபோட மாட்டேன்: வாழ்க்கையில் எனக்கு நிறைய, கஷ்டம், துயரம், ஏமாற்றம், தோல்வி கிடைத்திருக்கிறது. எல்லா வகையான பிரச்னைகளையும் நான் சந்தித்திருக்கிறேன். அதற்காக நான் வாழ்க்கையின் மீது பழி போடமாட்டேன். நான் ஒருகாலத்தில் பகல் முழுவதும் குடித்துக்கொண்டிருந்தேன். கூடா நட்பில் இருந்ததால் அது நடந்தது என்று சொல்வேன். நிறைய பேரை காதலித்திருக்கிறேன். எனக்கு 42 வயதாகிவிட்டது நான் சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. நான் எங்கேயோ சரியாக இல்லை.

பெண்ணிடம் ஏமாந்தேன்: நான் ஒரு பெண்ணுடன் முகநூலில் பழகி; கடன் எல்லாம் வாங்கி மலேசியா சென்றேன். அங்கு நான்கு நாட்கள்தான் இருந்தேன். அந்த சமயத்தில் நான் எக்கச்சக்க டார்ச்சரை அனுபவித்தேன். அந்த பெண் எப்போதும் பிரச்னை செய்தார், குடித்துக்கொண்டே இருந்தேன். பிறகு அந்தப் பெண்ணிடம் நான் பணத்தையும் இழந்துவிட்டேன். எப்படியோ எஸ்கேப்பாகிவிட்டேன். அப்போது ரொம்ப வெறுமையாக நான் இருந்ததால் ஏதாவது ஒன்று கிடைக்காதா என்று மலேசியா சென்றேன்" என்றார்.

More from Filmibeat

Read more about: maharaja மகாராஜா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X