நச்சு நச்சுனு கிஸ்.. 15 முறை டேக்.. அப்போ கூட விடல.. நகுலை கலாய்த்த நடிகர்!

சென்னை: பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல் நடித்துள்ள வாஸ்கோடகாமா படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேவயானி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ஜெகன் என பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய, நடிகர் மணிகண்டன், நகுல் அறிமுகமான பாய்ஸ் படத்தின் முத்த காட்சி குறித்து பேசினார்.

நடிகர் நகுல், அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வாஸ்கோடகாமா' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இப்படம், ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த், ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

vascodagama Manikandan

வாஸ்கோடகாமா: இந்த நிலையில் வாஸ்கோடகாமா படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய தேவயானி, என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சி,.அவனை நினைத்து எனக்குப் பெருமைப்படுகிறேன். அவன் ஒரு திறமையான நடிகன், அவனுக்கு ஒரு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும். நல்ல ஒரு கதைக்காக, நல்ல ஒரு இயக்குநருக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். எல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அந்த நல்ல நேரத்திற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான் நிச்சயம் அந்த நல்ல நேரம் விரைவில் வரும் என்றார்.

நடிகர் மணிகண்டன் பேச்சு: இந்த விழாவில் பேசிய, பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன், இந்த படத்தின் மூலம் நான் என்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, அதற்கு காரணமாக இருந்த நகுலுக்கு நன்றி என்றார். தொடர்ந்து பேசிய அவர், நகுலுடன் பாய்ஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.

அதில், பாய்ஸ் படத்தில் எனக்கும் நகுலுக்கும் எடுத்த முதல் காட்சியே முத்த காட்சிதான், அதுவும் சாதாரண முத்தம் இல்ல உதட்டோடு உதட்டில் கொடுக்கும் முத்தக்காட்சி. அந்த காட்சி கிட்டத்தட்ட 15 டேக்கு மேல் போனது. ஷாட் நன்றாக வர வேண்டும் என்பதற்காக ஷங்கர் சார் மிகவும் மெனக்கெட்டார். ஆனாலும் அதை சகித்துக் கொண்டு, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் நகுல் சிறப்பாக நடித்தார். அதை என்னால் மறக்கவே முடியாது என்று மணிகண்டன் அதில் பேசினார்.

நடிகர் நகுல்: 2003ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த், நகுல், மணிகண்டன், ஜெனிலியா, பரத் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் அறிமுகமான நகுல், அந்த படத்தைத் தொடர்ந்து, காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

More from Filmibeat

Read more about: vascodagama manikandan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X