அப்படி நடித்ததில் எனக்கு வருத்தமே இல்லை.. பாய்ஸ் படத்தில் கலக்கிய நடிகை ஓபன் டாக்

சென்னை: பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான புவனேஷ்வரி திரையில் தோன்றாமல் இருக்கும் சூழலில் அதுகுறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாய்ஸ். இந்தப் படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன், ஜெனிலியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடும் விமர்சனத்தை இந்தப் படம் சந்தித்தது. இந்தப் படத்தின் மூலம்தான் நடிகை புவனேஷ்வரியும் அறிமுகமானார்.

சர்ச்சையில் சிக்கிய புவனேஷ்வரி

சர்ச்சையில் சிக்கிய புவனேஷ்வரி

பாய்ஸ் படத்துக்கு பிறகு தமிழில் சில படங்களில் தலை காட்டிய புவனேஷ்வரி தெலுங்கிலும் நடித்தார். ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையிலும் சிக்கினார் புவனேஷ்வரி. அந்த விவகாரம் அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. நடிகர் சூர்யாகூட பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

விளக்கம் அளித்திருக்கும் புவனேஷ்வரி

விளக்கம் அளித்திருக்கும் புவனேஷ்வரி

இந்நிலையில் தனது திரையுலக பயணம் குறித்து அளித்த பேட்டியில் ஏராளமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், " என் குடும்பத்திற்கு சினிமாவில் பின்புலம் கிடையாது. சினிமாவிற்குள் நான் விருப்பப்பட்டு வரவில்லை. பாய்ஸ் படம்தான் எனது முதல் திரைப்ப்டம். அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் அது பெரிதும் பேசப்படது.

அந்தக் காட்சியில் நடிக்க தயங்கி முதல் படமே இப்படி இருக்கிறதே என ஷங்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் படத்தில் 5 பாய்ஸுடன் நீங்கள் நடிக்கப்போகிறீர்கள். ஆனால் ஒருவரது விரல்கூட உங்கள் மேல் படாது என கூறினார்.

சீரியல்தான் புவனேஷ்வரிக்கு ஃபர்ஸ்ட்

சீரியல்தான் புவனேஷ்வரிக்கு ஃபர்ஸ்ட்

நான் நடித்த விளம்பர படத்தை பார்த்துவிட்டு தீபம் சீரியல் இயக்குநர் என்னை நடிப்பதற்கு அணுகினார். எனக்கு விருப்பமில்லாத காரணத்தால் நான் மறுத்துவிட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து வற்புறுத்தினார். இதை பார்த்த என்னுடைய தாய் சீரியல்தானே நம்முடைய குடும்பத்தில் யாருமே சினிமாவில் இல்லை அது உன் மூலம் நிறைவேறட்டும் என்றார். அவரது ஆசையில்தான் நான் நடிக்கவே வந்தேன். எல்லோரும் சினிமாவுக்கு வந்த பிறகுதான் சீரியலுக்கு வருவார்கள். நான் சீரியலுக்கு வந்த பிறகுதான் சினிமாவிற்கு வந்தேன்.

சர்ச்சைகள் குறித்து மனம் திறக்கும் புவனேஷ்வரி

சர்ச்சைகள் குறித்து மனம் திறக்கும் புவனேஷ்வரி

மற்ற துறைகளிலும் பெண்கள் இருக்கின்றனர். ஆனால் சினிமா என்றால் மட்டும் அது பல இடங்களில் ஒளிபரப்பப்படுகிறது. அப்படி ஒளிபரப்பப்படும்போது ஏற்படும் சில சர்ச்சையான விஷயங்கள் சம்பந்தப்பட்ட பெண் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுகிறது. அந்தத் தாக்கம் என் மீதும் விழுண்டஹ்து. அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்பட்டவள் நான். அவரும் வீட்டுடன் இருந்த பெண்.

எனக்கு நடந்த விஷயங்கள் அவரது மனதை உடைய செய்துவிட்டது. ஆனால் எனக்கு இந்த விஷயங்கள் போகப்போக தெரிய ஆரம்பித்தது. நான் இந்த பிரச்னைகளில் இருந்து வெளியில் வர என்னுடைய குடும்பம் உதவியாக இருந்தது. பாய்ஸ் படத்தில் அப்படி நடித்ததற்கு நான் வருத்தப்பட்டது கிடையாது. அந்தப் படத்துக்கு பிறகுதான் நான் வேறு லெவலுக்கு சென்றுவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X