ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனை.. அவர் சொன்னதுக்காக அப்படி நடிச்சேன்.. நடிகை புவனேஸ்வரி வேதனை!

சென்னை: ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனைகள் எல்லாம் எனக்கு வந்தது என்று விபச்சார வழக்கில் சிக்கி கைதான நடிகை புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பழைய பேட்டி தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு பாசமலர் என்கிற சீரியலில் என்ற அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. அதனை தொடர்ந்து சந்திரலேகா, சித்தி போன்ற பல தொடர்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கி பிஸியான நடிகையாக மாறினார். இதையடுத்து, விபச்சார வழக்கில் சிக்கியதால், அவருக்கு வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து போனது.

Boys movie Actress Rajeshwari emotional interview about personal life

நடிகை ராஜேஸ்வரி: இதையடுத்து,நடிகை ராஜேஸ்வரி அளித்துள்ள பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பலர் சினிமாவில் இருந்து தான் சின்னத்திரைக்கு வருவார்கள் ஆனால், நான் சின்னத்திரையில் நடித்துக்கொண்டு இருக்கும் போது பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே பெரிய இயக்குநரின் படம் என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், முதல் படத்திலேயே அப்படி நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. அப்போது ஷங்கர் சார், கல்லூரி மாணவர்கள் அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதுதான் கதை. ஐந்து பேர் நடிப்பார்கள். ஆனால், ஐந்து பேரின் விரல் கூட உங்க மேல படாது என்றார். அவர் சொன்னால் தான் அந்த காட்சியில் நடித்தேன். நான் நடிச்சது ரொம்ப சின்ன சீனாக இருந்தாலும், அந்த கதாபாத்திரம் ரொம்ப பேசப்பட்டது.

பல பிரச்சனை சந்தித்தேன்: சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தேன், முதலில் ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அந்த போட்டோவை பார்த்துத்தான் தீபம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்துக்கொண்டுஇருக்கும் போதே தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்களில் நடித்தேன். அப்படி நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் ஒவ்வொரு பிரச்சனையாக எனக்கு வந்தது. சீரியலுக்கு வரும் போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனால் அதன் பிறகு ஒரு பெண்ணுக்கு என்னென்ன பிரச்சனை வரும் என தெரிந்து கொண்டேன்.

யாருடைய சப்போட்டும் கிடைக்கல: என் வாழ்க்கையில் ஒரு பொண்ணுக்கு என்னென்ன பிரச்சனை வரக்கூடாதோ அத்தனை பிரச்சனையும் வந்தது. அனைத்து துறையில் பெண்களுக்கு பிரச்சனை இருக்கு. ஆனால், அது சினிமாவில் வரும் போது, இவர் இப்படித்தான் என்று ஒரு கருப்பு முத்திரை குத்திவிடுகிறார்கள். இந்த நேரத்தில் சினிமாவில் இருந்து எனக்கு யாருடைய சப்போட்டும் கிடைக்கவில்லை. ஆனால், அந்த நேரத்தில் என்னுடன் என் குடும்பம் ஆதரவாக இருந்தார்கள். இதனால் தான் பெரிய பிரச்சனையில் இருந்து என்னால் கடந்து வர முடிந்தது. இருந்தாலும், அம்மாவால் இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, அவர் ரொம்ப உடைந்து போனார்கள். இதற்கு எல்லாம் என்னுடைய வளர்ச்சி பிடிக்காத சில அதிகாரிகள், சில அரசியல்வாதிகள் காரணம் என்றார்.

குடும்ப வாழ்க்கை சரியில்லை: மேலும், எல்லா பெண்களும் நல்ல குடும்ப வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால், என் குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என் அம்மாவைவிட அவன்தான் எனக்கு அனைத்திற்கும் துணையாக இருக்கிறான். தன் தாயை பற்றி தவறாக பத்திரிக்கையில் வரும் போது ஒருமகனாக அவன் எவ்வளவு உடைந்து இருப்பான் என்பது, ஒரு தாய்க்கு நன்றாகதெரிந்து இருக்கும் என்று அந்த பேட்டியில் உருக்கமாக பேசி உள்ளார் நடிகை ராஜேஸ்வரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X