ஆசினை பார்க்க ஓடி போன சிறுவர்கள் நடிகர் விஜய், நடிகை ஆசின் ஆகியோரைப் பார்க்கும் ஆர்வத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்த 5 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.கோவை திருச்சி சாலை சுங்கம் அருகே 5 சிறுவர்கள் நேற்று தவித்துக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் இருந்த போலீார்அந்த 5 சிறுவர்களையும் பிடித்து விசாரித்தனர்.அவர்கள் விக்னேஷ் (வயது 15), ஷேக் தாவூத் (வயது 18), அகமது (வயது 17), திருமலை (வயது 17), ராகுல் (வயது 17) ஆகிய5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து கொண்டிருப்பவர்கள் என்றும்நடிகர் விஜய், நடிகை ஆசினை பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஓடிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.ராமநாதபுரத்தில் இருந்து 5 சிறுவர்களும் உதகைக்கு சென்றுள்ளனர், அங்கிருந்து கோவைக்கு வந்த இவர்கள், ரயில் மூலம்சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.இதை தொடர்ந்து கோவை போலீசார் ராமநாதபுரத்தில் உள்ள அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

By Staff

நடிகர் விஜய், நடிகை ஆசின் ஆகியோரைப் பார்க்கும் ஆர்வத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்த 5 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

கோவை திருச்சி சாலை சுங்கம் அருகே 5 சிறுவர்கள் நேற்று தவித்துக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் இருந்த போலீார்அந்த 5 சிறுவர்களையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் விக்னேஷ் (வயது 15), ஷேக் தாவூத் (வயது 18), அகமது (வயது 17), திருமலை (வயது 17), ராகுல் (வயது 17) ஆகிய5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து கொண்டிருப்பவர்கள் என்றும்நடிகர் விஜய், நடிகை ஆசினை பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஓடிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ராமநாதபுரத்தில் இருந்து 5 சிறுவர்களும் உதகைக்கு சென்றுள்ளனர், அங்கிருந்து கோவைக்கு வந்த இவர்கள், ரயில் மூலம்சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து கோவை போலீசார் ராமநாதபுரத்தில் உள்ள அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X