7 வது குழந்தையை எதிர்ப்பார்க்கும் 'பிராஞ்சலினா'!

பிராஞ்சலினா என்று அழைக்கப்படும் நடிகை ஏஞ்சலீனா ஜோலி (35)யும் அவரது கணவர் நடிகர் பிராட்பிட் (48)டும் ஏற்கெனவே 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் 7-வதாக மற்றொரு குழந்தையை தத்தெடுக்க ஏஞ்சலினா ஜோலி விரும்புகிறார்.
எந்த நாட்டில் இருந்து குழந்தையை தத்தெடுக்க உள்ளார் என்று தெரியவில்லை. இந்த தகவலை தனது நண்பர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இதுபோல செய்திகள் வருவது முதல்முறையல்ல. ஏஞ்சலினாவின் ஏழாவது குழந்தை பற்றி மீடியாவில் கடந்த ஒரு வருடகாலமாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
வீட்டை விற்றனர்...
இதற்கிடையே, தனது மலிபு கடற்கரை வீட்டை 12 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டனர் ஏஞ்சலினாவும் பிராட் பிட்டும். இந்த வீட்டை நடிகர் எல்லன் டி ஜென்ரஸ் வாங்கியுள்ளார். வீடு விற்பனைக்கான காரணத்தை பிராஞ்சலினா தம்பதி வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











