மாஜி மனைவியுடன் விவாகரத்து பஞ்சாயத்து.. புது காதலியுடன் பிராட் பிட் அடித்த லூட்டி.. அட இத பாருங்க!

சென்னை: ஹாலிவுட்டின் ஒருகாலத்து டாப் ஸ்டார் ஜோடிகளான பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து விவகாரம், உலக பொழுதுபோக்கு வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான மற்றும் கசப்பான ஒன்றாக மாறிவருகிறது. இரு தரப்பிலும் மாறி மாறி சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், இந்த முன்னாள் ஜோடியை மனரீதியாக கடுமையாக பாதித்துள்ளது. இப்படி இருக்கையில், பிராட் பிட் புதிய காதல் வலையில் விழுந்துள்ள தகவல்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.

'அனிதா கோ' என்ற பிரபல நகை பிராண்டின் துணைத் தலைவராக இருக்கும் 'இனெஸ் டி ராமோன்' என்ற நகை வடிவமைப்பாளருடன் பிராட் பிட் தற்போது தீவிர காதலில் இருந்து வருகிறாராம். இனெஸ் டி ராமன் இதற்கு முன்பு பிரபல நடிகர் பால் வெஸ்லியை திருமணம் செய்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிராட் பிட் - இனெஸ் டி ராமோன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

மறுபுறம், இவர்களின் குடும்பத்தில் இருந்து தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது. பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி தம்பதியின் மூத்த மகனான மேடக்ஸ் (24), தனது பெயரிலிருந்து தந்தையின் குடும்பப் பெயரான 'பிட்' என்பதை சட்டப்பூர்வமாக நீக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இனி தனது பெயரை 'மேடக்ஸ் ஷிவன் ஜோலி' என்று மாற்றக்கோரி அவர் கொடுத்துள்ள மனு, ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Brad Pitt Moves On With New Love Amid Divorce Battle With Angelina Jolie Son Maddox Drops Pitt Surname
Photo Credit:

6 குழந்தைகள்: சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கு முன்பே, ஏஞ்சலினா ஜோலி நடிப்பில் வெளியான 'கூடூர்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மேடக்ஸ், அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் தனது தந்தையின் பெயரை நீக்கியிருந்தார். மேலும், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் தயாரிப்பு குறிப்புகளிலும் அவரது பெயர் 'மேடக்ஸ் சிவன் ஜோலி' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 2016-ல் பிரிந்த இந்த தம்பதிக்கு மேடக்ஸ், பாக்ஸ், ஜஹாரா, ஷிலோ, நாக்ஸ் மற்றும் விவியென் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புது காதலி: தன்னைச் சுற்றி இத்தனை சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருந்தாலும், பிராட் பிட் தனது புதிய காதலியுடன் நிம்மதியாக இருப்பதாக ஓப்பனாகப் பேசியுள்ளார். "என் வாழ்க்கை இப்போது மிகவும் சுருங்கிவிட்டது. என் நண்பர்கள், என் காதல், என் குடும்பம் என இப்போது என் வாழ்க்கை பாதுகாப்பாக நகர்கிறது. இந்த விவாகரத்து சர்ச்சை என்பது என்னைச் சுற்றி எப்போதும் மொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறிய ஈ போன்றது தான். இது ஒரு எரிச்சலூட்டும் விஷயம் தான் என்றாலும், இதைத் தாண்டி நான் உண்மையில் செய்ய விரும்பும் காரியங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்," என்று பிராட் பிட் கூலாகத் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளுக்கு நடுவிலும் பிராட் பிட் தனது புதிய காதலியுடன் டூயட் பாடி வரும் இந்த தகவல், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X